பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய அரச இனங்கள் ஒளிகுன்றல் - 487 பகுதி : 12 பக்கம் : 268. அறுபத்திமூன்று சைவ நாயன் மார்களில் ஒருவரான கூற்றுவநாயனார் ஒரு களப்பாளன் எனத் தம்முடைய திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி அவர்களால் பத்தாம் நூற்றாண்டு) அழைக்கப்பட்டுள்ளார். (செய்யுள் 47; வரி 4]. இவன் சேக்கிழாரால் (பதினொன்றாம் நூற்றாண்டு 'களந்தை முதல்வனார்” என்றும் 'களந்தை வேந்தர்" என்றும் அழைக்கப்பட்டுள்ளான் பெரியபுராணம்; கூற்றுவநாயனார் புராணம்) உமாபதி சிவம் அவர்களின் திருத்தொண்டர் புராணசாரத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளான். இவற்றிலிருந்து களப்பாளர், தொடக்க காலத்தில், தஞ்சை மாவட்டத்துப் புகழ் பெற்ற கோயில் ஊராகிய களந்தை என்ற ஊரைச்சேர்ந்தவராவர் என உணர்ந்த கொள்ளலாம். "ஆளர்" என்ற விகுதி, பிராமணர்களைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாகிய அந்தணாளர் என்பதில் வரும் விகுதி போன்றதே ஆம். இச்சொல்லாக்கம் குறித்து ஒன்றும் ஏற்றுக் கொள்ளக் கூடாததான நகைப்பூட்டவல்ல சொல்லாக் கங்களை, உரையாசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். களப்பாளர் என்பது, பாலியில் "களப்ஹ" என்றும் தென்னாட்டுச் சமஸ்கிருதத்தில் "களப்ஹர" என்றும் உருவுதிரியும் "களப்ப" என்பதன் மறுவடிவமே ஆம். О О О