பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இடையறாத வரலாற்றுச் சிறப்புடைய தமிழ் இனத்தின் வரலாற்றை முதன்முதலாக விரிவாக ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று அறிஞர்களில் பேராசிரியர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களும் ஒருவர். தமிழ் இன வரலாற்றை, தமிழ் மொழியின் சிறப்பை, தமிழ் இலக்கியத்தின் பெருமையை, தமிழ்ப் பண்பாட்டின் மேன்மையை, தமிழரல்லாத பிற இந்தியக் குடிமக்களுக்கும் மேனாட்டாருக்கும் எடுத்துரைத்த பெருமை அவரைச்சாரும். தங்கத்தமிழ் இலக்கியமான சங்கத் தமிழ்நூல்கள் வெறும் பாட்டிலக்கியமே என்று பலர் எண்ணிவந்த சூழ்நிலையில், சங்க இலக்கியம், சங்கப் பாடல்கள், எடுத்துரைக்கும் தமிழ் இன வரலாற்றை விரிவாக அவர் எழுதினார். சென்ற நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்து வந்த வரலாற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்து, தமிழ் மக்களுக்கு முழுவதுமாக அறிமுகப்படுத்தியவர் பெரும் நூலாசிரியர், தமிழறிஞர் புலவர் கா. கோவிந்தன், எம். ஏ. ஆவர். தமிழ் வரலாறு என்னும் தலைப்பில் இரண்டு தொகுதி களில் வெளிவந்த இந்நூல் மக்கள் எளிதில் வாங்கிப் படிக்கும் வகையில் தமிழர் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு என்று மூன்று நூல்களாகப் பிரிக்கப்பெற்று இப்போது வெளிவந்துள்ளது. - - அய்யங்கார் மூலநூலை எழுதும் போது கிடைத்த வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுச் செய்திகள், பிற ஆய்வு நூல்கள் போன்றவற்றைவிடப் பிற்காலத்தில் அவை கூடுதலாகக் கிடைக்கலாயின. எனவே, அவற்றை