பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழர் வரலாறு மையக் கருவை உருவாக்கிவிட்டன. நாட்டின் இப்பகுதியைச் சேர்ந்த பிராமணர்கள், சில வகையில், வேதகாலத்துப் பழக்க வழக்கங்களை அப்படியே காப்பாற்றிக் கொண்டு பிற வகைகளில் ஆரிய வர்த்தத்திற்குத் தெரியாத, தென்னிந்தியப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் சிறப்பியல்பினைக் கொண்டுள்ளனர். நடுநிலையில், முனைப்பாக, பண்டைய வாளபிட்டர்களைப் போல, உச்சிக் குடுமியின் முடிநன்கு தெரியும் வகையில், தலை மயிரை வழித்துக் கொள்கின்றனர். (ரிக்வேதம் : 7 : 33 : 1) பண்டு, "பவஸ்த" மற்றும் "வiரி" என்றும், அல்லது "பரொத் ஹானம்" மற்றும் "நீவி” என்றும் அழைக்கப்பட்ட இரண்டு ஆடைகளை அணிந்தனர். (அதர்வ வேதம். 47.6 : 9107;8216) இயலும் போதெல்லாம் தைத்த ஆடை அணிவதைத் தவிர்த்தனர். பிற்கூறிய பழக்கத்தில் ஆடவரினும், மகளிர் மிகவும் குறியாக இருந்தனர். ஆனால், பிறிதொரு வகையில், திருமணச்சடங்குகளில் நனிமிகு இன்றியமையா நிகழ்ச்சியாகத் தாலி அணிந்துகொள்வது, மஞ்சள் பூசப்பட்ட சிறு கயிற்றைக் கழுத்தில் அணிந்து கொள்வது போலும், ஆரியமல்லா வழக்கங்கள் தென்னிந்தியப் பெண்டிர்க்கு மிகவும் விருப்பம் தருவனவாய் அமைந்தன. (இது திருமணச் சடங்கைப் புனிதமாக்கத் தேவைப்படும் உயிர்நாடியான சடங்குகளாகக் கைப்பிடித்தல் (பாணிகிரகணம்) ஏழு அடி எடுத்து வைத்தல் (சப்தபதி) ஆகிய நிகழ்ச்சிகளைக் கருதும் "க்ஹ்ஹ்ய சூத்ரங்களுக்கு, அறவே தெரியாத, தனித் தமிழ் வழக்கங்களாம்) மேலும், கணவனாக வரப்போகிறவனை, மணப்பெண்களின் தாயும், மணப் பெண்ணின் தோழிகளும் வரவேற்கும் முறையும், தஸ்யூக்களின் பழைய மணச்சடங்குகளின் சின்னங்களே ஆகும். மணமகனையும் மணமகளையும் திருமணப்பந்தற்கீழ் நிற்கவைத்து, அவர் கால்களைக் கழுவுதல் அடையாளமாகப் பால் வார்த்துக்கழுவி, செந்நிறம் ஊட்டப்பட்ட சோற்று உருண்டைகள் நான்கு திக்கிலும் வீசப்படும். (மணமக்களைத் திருமணப்பந்தற்கீழ் வரவேற்றல், அகநானூற்றில் (86) விளங்க உரைக்கப்பட்டுள்ளது. "நிரைகால்தண் பெரும் பந்தல்". முருகனை வழிபடும்போது, அவனுக்கு அளிக்கும் பலியாக,