பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழர் வரலாறு சான்றுகளைத் தரவல்ல ஒரு குறிப்பீட்டினை எனக்கு அனுப்பியுள்ளார். நமக்குக் கிடைக்கும் நனிமிகப் பழைய திராவிடக்கிளைமொழி, மத்திய மாநிலத்திற்கும், வடசர்க்கார் மாநிலத்திற்கும் இடையில், மலைப்பகுதியில் பேசப்படுவதும், சில சமயம் "கோந்த்” எனத் தவறாக அழைக்கப்படுவதும் ஆகிய "கூயி" மொழி ஆகும். இம்மொழி பேசுவோர் திராவிடர்களில் மிகவும், நாகரிகம் பெற்றவர்கள். நாளடைவில் விட்டொழிந்த பழைய பழக்க வழக்கங்களைக் கைவிடாமல் அப்படியே காத்து வருகின்றனர். குறிப்பீடு தந்த ஆசிரியர், "அக் கூயி" மக்களிடையே பல ஆண்டுகள் வாழ்ந்தவர். ஆகவே, அவர் தரும் செய்தி முதல் தரமானவை. அவர் கூறுகிறார் : "ஒவ்வொரு கூயி" இனத்துச் சிற்றுாரும் ஊர் முகப்பில் "நிஷான் பெண்ணு' எனும் பெயர் தாங்கிய பெண் தெய்வத்தைக் கொண்டுள்ளது. அது ஆறு அல்லது ஒன்பது அங்குல உயரம் உள்ள நீண்ட உருளைக் கல்வடிவில் ஊர் நுழைவாயிலில் ஒரு மரத்தடியில் நிறுவப்பட்டுள்ளது. அதை மனிதர்களோ மிருகங்களோ தொட்டுப் பழுதாக்கி விடக்கூடாது என்பதற்காக அது கற் குவியல்களால் சூழப்பட்டிருக்கும். அக்கல் உடைந்துவிட்டாலோ இருந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டாலோ வேறுவகையில் பழுதுபட்டாலோ அவ்வூருக்குச் சில கேடுகள் வந்துறும் என நம்பப்படுகிறது. கிராமத்தவர் ஒவ்வொரு விழாவின் போதும் கோழி ஆடு எருமை பசு பன்றி ஆகியவற்றை அப்பெண் தெய்வத்திற்குப் பலி கொடுத்து வருகின்றனர். "இராவணன் தலைநகரின் காவல் தெய்வமாம் "லங்கா" என்பவள், தன்னால் அழிக்கப்பட்டபோது அவளோடு அனுமான் நடத்திய போர் பற்றிக் கூறும் வால்மீகியின் கவிதைக் கூற்றின் பின்னணியில் இந்நிகழ்ச்சி நுண்ணியதாக உய்த்துணரப்படும். அவள் அந்நகரைக் காத்து நிற்கும் கட்புலனாகாகக் கன்னித் தெய்வம். முழுமுதற்கடவுள், அவளை நோக்கி, "வாணர வீரன் ஒருவனால், நீ அழிவுறும்போது இராக்கதர்களை, அழிவுகாலம், அணுகிவிடும் என்பதை அறிந்து கொள்வாயாக" எனக் கூறியிருந்தது. (அஹம்து நகரி லங்கா, ஸ்வயமெவ ப்லவங்கம / நிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமென ம ஹா பல / இதம் க தத்ஹ்யம் ஸ்குனு மெ ப்ருவான்த்யா