பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 x தமிழர் வரலாறு பல்வேறு நாடுகளைக் குறிப்பிட்டுவிட்டு இறுதியாக "கேரள தேசங்களையும், சோழ தேசங்களையும் உள்ளிட்ட பாண்டிய நாடுகளையும் எல்லாவற்றையும் கவனமாய்த் தேடிப் பாருங்கள்" என ஆறாவது சுலோகத்திலும், கடக்க வேண்டிய கடலைக் குறிப்பிடும்போது, அதற்கு முன்பாகப் "பொன் மயமானதும், அழகானதும் ஏற்றதும், முத்துகளாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பெற்றதுமான பாண்டிய நாடுகளின் உட்புகு வாயில் கதவுகளைக் காண்பீர்கள்" எனப் பதின்மூன்றாவது சுலோகத்திலும் கூறியிருப்பது காண்க. அதுமட்டுமன்று இராமயணப்போர் முடித்துச் சீதையைச் சிறை மீட்டு விமானம் மூலம் அயோத்தி திரும்பும் இராமன், இடைவழியில் உள்ள இடங்களைச் சீதைக்குக் காட்டியது கூறும், யுத்த காண்டம், இரண்டாம் பகுதி, 126வது சருக்கத்தில், "தடங்கண்ணாய்! உன் காரணமாய், நீர் நிறைந்த பெருங்கடலில் கட்டுவதற்கு அரிய நளசேது என்ற இந்த அணை, என்னால் கட்டப்பட்டது" எனச் சேதுவைக் காட்டிவிட்டு, அடுத்ததான 16வது சுலோகத்தில் "கரையில் லாததும், முழங்குவதும், சங்குகளாலும், முத்துச்சிப்பி களாலும் நிறைந்ததுமான இச்சமுத்திரத்தைப் பாராய்" எனப் பாண்டி நாட்டுக் கடல் எனப் பெயரால் இல்லை எனினும், "அப்பாண்டியக்கடற்கரைக்கே” உரிய செல்வமான முத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார் என்றும் கூறியுள்ளார் வால்மீகி. ஆக, வால்மீகியார், பாண்டிய நாட்டையும் குறிப்பிட் டுள்ளார். அப்பாண்டிய நாட்டுக் பெருநகரத்து வாயில் களையும், அப்பாண்டி நாட்டுக்கே உரிய வளமாம் முத்து வளத்தையும் குறிப்பிட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி என உறுதிப்பட்டிருக்கவும், "வால்மீகி பாண்டியரைப் பெயர்சுட்டிக் கூறவில்லை" என்பதிலும் உண்மை இல்லை. ஆகச் சேர, சோழ, பாண்டிய அரசு இனங்கள், இராமாயண காலத்தில் தோன்றவில்லை. இராவணன் வீழச்சிக்குப் பின்னரே, தோன்றின என்பதற்குத் திருவாளர் பி.டி. எஸ். சீனிவாச அய்யங்கார் அவர்கள் எடுத்து வைத்த வாதம் எடுபடவில்லை. ஆகவே, அவரின் அக்கூற்று, இந்திய