பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போர் - 67 குடியின் தோற்றமூலம் குறித்து எதுவும் தெரியவில்லை என்பதாம். புதிதாக எழுந்த, இந்தச் சோழ, சேர, பாண்டிய அரசர்கள், வடஇந்தியாவோடு, தென் இந்தியா கொண்டிருந்த ஆண்டாண்டு, காலத்தொடர்பை விடாது கட்டிக் காத்தனர். இராமன் இறப்பிற்குப் பின்னர், ஆரியவர்த்த அரசியலில், அயோத்தியா கொண்டிருந்த ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. சில தலைமுறைகள் கழித்து, குரு, பெளரவ ஆட்சியைப் புகழ் சிறக்க உயர்த்தினார். குருஷேத்திரம், இந்தியாவின் தலைநகராய் உயர்ந்தது. இராமன் காலத்திற்குப் பின்னர்ப் பதினைந்து தலைமுறைகள் கழித்துக், குருவின் வழி வந்தவர்களிடையே, பகையும், இந்தியச் சிற்றரசர்களிடையே பொறாமையும் வளர்ந்தன. இறுதியில் பாரதப் போரில் கொண்டுபோய் விட்டது. இக்கால கட்டத்தில், மகாபாரதக் கூற்றுக்களால் உறுதிப் படுத்தப்படுவது போலத் தென்னிந்திய அரச இனங்கள் மூன்றும், வடஇந்திய அரசர்களோடு, அமைதி அல்லது வேறு முறையிலான உறவினை வளர்த்து வந்தனர். மகாபாரதப் படைப்பு : அப்பெருங்காப்பிய அகச்சான்றுகளைப் பயன்கொள்ளும் முன், அந்நூல், பல்வகைப் பொருட்பாடலாம் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். அதன் உள்ளடக்கம் கீழ்க்காணும் மூன்று வகைகளில் பிரிக்கப்படலாம். 1. பாரதப் போர்வீரர்களின் வாழ்க்கை, மற்றும் அப்போர் பற்றிய கட்டுக்கதைகள் இவை, அப்பாட்டில் கருப் பொருளாக அமைந்து, அப்போர் நிகழ்ந்த காலந்தொட்டுப் பெரும்பாலும், நாட்டுப்புறப் பாடலாக உயிர் பெற்றி ருந்து. பெளரவ அரசமரபில், அர்ச்சுனனுக்கு ஆறாவது

  • சீதாநாத் ப்ரதான் அவர்களின் பண்டை இந்தியாவின் கால suifspartill: 15- (Chronology of ancient india) u4slb : 109. பர்கிதர் அவர்கள் 20 தலைமுறையாகக் கணக்கிடுகிறார். பழைய இந்தியா a var prib, tog 4 seyib (Ancient India. History and Tradition) பக்கம் : 148-149.