பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போர் , 69 முந்தைய காலத்து நிகழ்ச்சிகள் குறித்த அகச்சான்றுகளாகக் கொள்ளப்படும். அவை, அப்போருக்குப் பின்னர் நெடுங் காலம் கழித்து, அப்பாக்களுள் வழிகண்டு துழைந்துவிட்டன. 3. விஷ்ணு, சிவன் குறித்து, வேதங்களில் கூறப்படும் கதைகள் அல்லாத வேறு கதைகள், இவை பாரதப்போரை அடுத்து வந்த காலங்களில், முக்கியத்துவம் பெற்று ஆகமநெறிகள், அந்நாட்களில், பாகவதநெறி, மகேஸ்வர நெறி என இரண்டே இருந்தன. முன்னது விஷ்ணு வழிபாட்டை யும், பின்னது சிவ வழிபாட்டையும் குறிப்பன. விஷ்ணுவை, சிவனை, அவர்களின் சின்னங்களை வழிபடும் வழிபாட்டு. முறைகள் விஷ்ணுவின் அவதாரங்கள், சிவன் மக்களிடையே தோன்றும் திருவிளையாடல்கள் குறித்த கவிதைகள், ஏகாந்திகளும், சிவயோகிகளும் பின்பற்றிய குறிப்பிடத்தக்க சிறப்பியல்வு வாய்ந்த யோகப் பயிற்சிகள், மனிதன் பேரின் பத்தின் நுண்ணிய பிண்டமாம் மனித உயிர், உலகப்பெரும்படைப்பு, பேரண்டம் ஆகியன குறித்து சாங்கியத் தத்துவப் பிரிவுகளிலிருந்து வளர்ந்த பல்வேறு கொள்கைகளாகக் காணும் தத்துவ ஞான ஆய்வுகள் ஆகியன அவ்வாகம நெறியில் வளர்ந்து உருப்பெற்றன. இந்த ஆகம நெறிகள், ஏறத்தாழ கி. மு. 1000க்குப் பின் சில நூற்றாண்டுகள் கழித்து, மகாபாரதத்தில் முறைப்படுத்தா நிலையில் இணைக்கப் பெற்றன. 4. அர்த்த சாத்திரங்கள் தர்மசாத்திரங்கள், மோட்ச சாத்திரங்கள், இப்பொருள்கள் குறித்த பழைய கொள்கை ஆய்வுகள் இவை மறைந்துபோகும் அபாயத்தில் இருந்து பாரத வீரகாவியத்தில் பற்றுற இணைக்கப்பட்டு, அதன் நாடகப் பாத்திரங்களின் உரையாடல்கள் என்ற வகையில், அக்கவிதையில் பின்னப்பட்டுப் புதிய வாழ்வுரிமை பெற்றவை. ஆய்வு செய்து முழுவடிவம் பெற்ற பிற்காலக் கொள்கை விளக்கம் போலல்லாமல், இச்சாத்திர முடிவுகளெல்லாம், ஏறத்தாழ உருவம் அற்றவை.