பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பண்டைக்காலத்தில் (ஏறத்தாழ, கி. மு. 3000-2000) வட இந்தியத் தொடர்பு தென்னிந்தியா வெளி உலகோடு தொடர்பற்றது :- இது ஒரு பொய்க்கோட்பாடு திருவாளர் வீ. ஏ, சிமித் அவர்கள், "நில இயல் நிலை மைகள், பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை, இந்திய வரலாற்றை, நன்கு வரையறுக்கப்பட்ட மூன்று அரசியல் நிலப்பிரிவுகளாகப் பிரித்திருந்தன : 1) சிந்து கங்கை பாயும் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய வட இந்தியச் சமவெளிகள், 2) நர்மதா ஆற்றுக்குத் தெற்கும், கிருட்டிணா துங்கபத்திரை ஆறுகளுக்கு வடக்கிலும் உள்ள தென்னிந்திய மேட்டு நிலம். 3) அவ்விரு ஆறுகளுக்கு அப்பால், தமிழ்நாடுகள் பலவற்றை உள்ளடக்கிய தென்கோடி. பொதுவாக நில இயல் சார்ந்த இம்மூன்று பிரிவுகளும் ஒவ்வொன்றும், தனக்கே உரிய தெளிவான, நனி மிகச் சிக்கல் வாய்ந்த கதைகளைக் கொண்டுள்ளது. இம்மூன்று வரலாற்றுப் பிரிவுகளுக்கு மிடைய, நிலவிய தொடர்பு பற்றிய குறிப்புகள், மிக அதிகமன்று" எனக் கூறுகிறார். இவ்வகையில், இவ்வாசிரியர், தம்முடைய இந்தியா பற்றிய ஆக்ஸ்போர்டு வரலாற்று நூலில் தக்கண பீடபூமி, மற்றும் தென்கோடி நிலப்பரப்புகளின் கதைகளுக்கு இரண்டாந்தர இடமே கொடுத்திருப்பதற்கு நியாயப் படுத்துகிறார். இம் மனப்போக்கை விளக்க, "தென்னாடு நர்மதா, விந்தியம், சாத்புரா மலைகளாலும், மலைக்காடுகளாலும் பரந்த, அறவே உட்புகமாட்டாத் தடையரண்களால் மூடப்பட்டுக் கிடந்தது. வடக்கிற்கும்