பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போர் - 73 நாகர்கள், வடகிழக்கு இந்தியாவில் உள்ளனர். வடமேற்கில் உள்ள தக்ஷசீலத்தில் உள்ள நாகர்கள், பரீrவித்தின் மரணத்திற்குப் பொறுப்பாளர். நாகப்பட்டினம், நாகூர் என்ற பெயர்கள் சான்று கூறுவது போல், தென் இந்தியாவில் நாகர்கள் இருந்தனர். பாம்புகளை மட்டுமே வழிபடும் நாக வழிபாடு, வாழ்க்கை வளர்ச்சி நிலையில், மனிதன், தொடக்க காலத்தில் வாழ்ந்த மலைநாட்டில்தான் முதன்முதலில் முகிழ்த்தது. உலகம் முழுவதிலும், அது, பரவலாக இருந்து வந்தது. நாகர்கள், பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்திருந்தனர். தங்கள் இனச்சின்னங்களாகப் பல்வேறு பொருட்களை மேற்கொள்ள, ஆதிப்பழங்குடி இனத்தவரைத் தூண்டிய காரணங்கள், நமக்குத் தெரியவில்லை. ஆனால், விரைந்து உயிர் போக்கவல்ல நாகம், உலகம் முழுவதும் ஏன் வழிபடப்பட்டது என்பதை, நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். நாகரிகமற்ற காட்டுமக்களின் வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சி மாணவர்களுக்குத் தங்கள் இனச் சின்னமாம் கடவுள்களின் பழக்க வழக்கங்களை, அக்கடவுள்களை வழிபடுவாரும், அப்படியே பின்பற்றுவதன் உண்மை நன்கு தெரியும், பழைய குகைவாழ்மக்கள், பாதுகாப்பு நாடிக் குகையுள் தவழ்ந்து செல்வதும், பாம்பு, தன் புற்றினுள் ஊர்ந்து செல்வதும் ஆகிய இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, அவன் திருந்தா உள்ளத்தில், அவனுடைய கடவுள் மீது வழிபாட்டுணர்வை நிறைவித்துவிட்டது. (சிவனின் முதல் பக்தனாகிய காளை செய்வது போலவே செய்து காட்டுவதன் மூலம், நந்தியை மகிழ்விக்கலாம். தமக்கும், சிவனுக்கும் இடையில், நல்ல வலுவான துாதுவனைப் பெறலாம் என்ற நம்பிக்கையில், சிவ. வழிபாட்டாளர், இன்றும் காளை போலப் பொருளற்ற குரல் எழுப்புகின்றனர்). . - சிவ விஷ்ணு வழிபாட்டு முறைகள் எழுந்த பிறகும் பலர் அவ்வழிபாட்டு மறைகளில் இணைந்துவிடாமல் நாக வழிபாட்டாளர்களாகவே இருந்துவிட்டனர். ஆனால், நாகர் எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டு ஏனைய மக்கள்