பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழர் வரலாறு தங்கள் தலைமயிரைக் கோதி, தலை உச்சியில் ஒன்று சேர்த்து, முடி நிமிர்ந்து நிற்குமாறு முடி போட்டுக் கொள்வர் என நான் நம்புகிறேன். இந்த முறையில் அழகு செய்யப்பட்ட தலைமயில் கொண்ட, தென்னிந்தியர்களை நான் பார்த்ததிலிருந்து, பண்டைய நாகர்கள் தங்கள் தலைகள், தாங்கள் வழிபடும் நாகம் போலச் செய்து கொள்ள முயன்றனர் என உய்த்துணர்கின்றேன். இத்தகு மக்களிடையே, மயிர்வழுக்கை வழக்கம் புகுத்தப்பட்ட போதும் கைவிட முடியாத அளவு, மிகமிகப் பழமையானது, அதனால் மிகவும் புனிதமானது என்பதால், தலை உச்சியில், சிறுமுடி எடுக்கப்படாமல், இன்றும் விடப்படுவதற்கு இதுவே விளக்கமாகக் கூடும். இந்நாகரிக முறையை, நாயர்கள், இன்றும் கொண்டிருப்பதால், அவர்கள், பெரும்பாலும், பழைய நாகர்களின், இன்றைய பிரதிநிதிகளாவர். பரசுராமனின், குடி அல்லது ஆன்மீக வழியில் வந்தவர் களிடமிருந்து ஆரிய நாகரிகத்தை, முதன்முதலில் ஏற்றுக் கொண்ட நாகர்கள், நம்பூதிரிகள் என்றும் நான் முடிவு செய்கின்றேன். - மலபாரைச் சேர்ந்த நம்பூதிரிகள், தென்னிந்தியப் பிராமணர்களின், மிகப்பழைய சமுதாயப் பிரிவனராவர் என்பது, திருவாளர், கே. ராமவர்மராஜா அவர்களின் கட்டுரையில் காணும் பின்வரும் உண்மைகளாலும், உறுதி செய்யப்படுகிறது. 1. நம்பூதிரிகளில் பெரும்பாலான யஜூர்வேதிகள் பெளதாயன, மற்றும், பாதுலக வழியைச் சேர்ந்த மிகப் பழைய சூத்திரர்கள். . . 2. முதல் மூன்று வேதங்கள் மட்டுமே, அவர்களிடையே பழக்கத்தில் உள்ளன. ஆகவே, அவர்கள், வேதவரிசையில், அதர்வவேத சமிதா இணைவதற்கு முன்பு, அதாவது வேதவியாசர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பு தோன்றியவர்களாதல் வேண்டும். -