பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழர் வரலாறு எக்காலத்தும் கொள்கை அளவில் இருந்ததே அல்லது, என்றும் நடைமுறையில் இருந்தது இல்லை. காரணம் : கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையும் பிராமணர்களின் வாழ்க்கை முறை, பெரும்பாலான தமிழ் மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து முழுமையாக வேறுபட்டே இருந்தது. ஆரியச் சமயநெறிகள், தமிழ்நாட்டில் பரவுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னர்த் தமிழ்நாட்டு மக்கள் கற்கால அளவில், பாலை, மலை, கடல், காடு, ஆறு ஆகிய நிலங்களில் அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை நிலைக்கு ஏற்ப, முறையே, நாடோடும் மறவர், வேட்டுவர், மீனவர், ஆயர், உழவர் என ஐவகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். இப்பழங்குடியினர் ஐவரும், ஆரியப் பழக்கவழக்கங்கள் பண்பாடுகளிலிருந்து, பல நிலைகளிலும் வேறுபட்ட தங்களுக்கே உரிய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் வளர்த்துக் கொண்டனர். ஆரிய வாழ்க்கை நெறிகள், தமிழர் வாழ்க்கை நெறிகளைப் பாதிக்க இயலவில்லை. ஆகவே, தமிழரின், அம்மண்ணுக்கே உரிய நாகரிகப் பெருவெள்ளமும், வந்து புகுந்த ஆரிய நாகரிகச் சிற்றருவியும், யமுனையும், கங்கையும், பிரயாகை தொடங்கிப் பலகாவதம் இரண்டின் வெள்ளமும், ஒன்றொடொன்று கலக்கப் பெறாமலே, ஓடி வருவது போல், அடுத்தடுத்து ஒடுவவாயின, நமக்கு இப்போது கிடைத்துள்ள தமிழ்ப் பாக்களில், நனிமிகப் பழைய பாக்கள், பலநூறு ஆண்டுக்காலம் வரையும், தமிழ்ப் பிராமணர்கள், தமிழரின் தேசியப் பெருவாழ்வாம், வெள்ளப் பெருக்கிலிருந்து பெருந்தொலைவு ஒதுங்கியே வாழ்ந்து வந்தனர்; தமிழ்ப்பாக்களின் போக்கை ஆட்கொண்டிலர் என்பதை உணர்த்துகின்றன. பாணினியும், தென் இந்தியாவும் : மகாபாரதப் போர் முடிவிற்கும், நந்த அரசு இனம் ஆட்சியமைப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் குரு பாஞ்சாலம், மகதம், அவந்தி மற்றும் பிற வட இந்திய நாடுகளில், அரச இனங்கள், வண்ணம்மாற்றிக் காட்டும்