பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

spoken in the Northern corner of India, possesses a few words allied to Tamil words. The only legitimate inference from this is that the Tamil language or a language allied to it prevailed upto the North West province in ancient times... These facts can only prove that people speaking dialects allied to Tamil once inhabited the whole of India and not that these people must necessarily have come into India from optside the Country" Page 2.

தமிழகத்தில் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட பழம் பெரும் கலைப் பொருட்களும், வரலாற்று நினைவுச் சின்னங்களும், வரலாற்றுத் தொடக்க நிலையாகிய பழங்கற்காலம் முதல், இன்றைய புத்தம்புது நிலையாகிய உலோகக் காலம் வரை, எத்தகைய கொடிய இயற்கை நிலை பிறழ்வு காரணமாகவும். இடையற்றுப் போவதற்கு உள்ளாக்கப்படாத, நாகரீகத்தில் முறையான வளர்ச்சி, இந்நாட்டில் இருந்து வந்தது. என்பதை நிலைநாட்டும் அழியாக் கருவூலத் தொகுப்பாய் அமைந்துள்ளன. இந்நாகரீக வளர்ச்சிப் பருவ நிலை முழுவதும், தமிழ்மொழி தென்னிந்தியாவில் வழக்காற்றில் இருந்துவந்துளது. இந்நாகரீக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையையும் மொழி வடிவில் உணர்த்தத் தேவைப்படும். சொற்கள், தமிழ் மொழியில் தொடக்க நிலை மொழியமைப்பிலேயே இடம் பெற்றுள்ளன. அப்பண்டைக் காலப் பழக்கவழக்கங்கள், தமிழ் மொழியின் நனிமிகப் பழைய ஏடுகளில் போற்றிக் காக்கப்படுவது, நீண்டகாலமாகவே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, தமிழர், தென்னிந்தியாவின் பழம்பெரும் குடிகளாவர். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தக் குடியினராவர் எனக் கூறியிருப்பதன் மூலம் (பக்கம் 3) இம்மண்ணுக்கு உரிய மாந்தராவ்ர் தமிழர் என்பதை நிலைநாட்டியுள்ளது இந் நூல்.

“Moreover the artefacts and other relics of ancient times discovered so far, in Southern India form an unbroken series, showing that there has been in this Country a regular evolu-