பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் 75

பழக்கவழக்கங்கள் பற்றிய, இங்கொன்றும் அங்கொன்றுமான இவை போலும் குறிப்பீடுகளைப் பிற்கால இடைச் செருகல்களாக மதிப்பிடல் கூடவே கூடாது; அவை, ஆரிய பழக்க வழக்கங்கள், கோதாவரிக்குத் தெற்கில், இராமர்காலத்தில் பரவத்தொடங்கின; ஆனால் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கின என்ற உண்மைக்கு விளக்கம் காணத் துணை புரிகின்றன. ஆரிய நாகரிகத்தின் கட்டாய மேலாதிக்கம் ஒரு சில இராக்கதர்களைச், சமற்கிருதம் கற்கச் செய்தது. சமற்கிருதம் அறிந்தவன் இலவலன் ஒருவன் மட்டும் அல்லன். சமற்கிருதத்தில் வல்லவன் என இராவணன் புகழப்படுகிறான். அதற்கேற்ப, சீதையுடன் எம்மொழியில் உரையாடுவது என்பது குறித்துத் தனக்குத் தானே ஆராய்ந்துகொள்ளும் போது, அனுமன் "சமற்கிருதத்தில் பேசினால், அவள். என்னை இராவணனாகத் தப்பாகக் கருத நேரிடுமே எனக் குறிப்பிடுகிறான் (யதி வாகம் ப்ரதாஸ்யாமி த்விஜாதிரிவ. சமஸ்க்ரதாம் ராவனம் மன்யமானாமாம் சீதா ப்ஹீத ப்ஹவிஷ்யதி "வானரஸ்ய விஸெஷெண கத்ஹம் ஸ்யாட் அப் ஹிப்ஹாஷனம் அவஸ்யிம் எவ வக்தவ்யம்மானுஷம்வாக்யம் அர்த்ஹவத்" ராமாயணம் 5 : 20 : 19) அனுமான்தானும் சமற்கிருத மொழியின் எட்டாவது இலக்கணப்பெரும் பேராசிரியன் எனக் கூறப்படுகிறான். ஆனால் இது பிற்கால அனுமான் ஒருவனைக் குறிப்பதாகக் கூடும். மேலும், இராக்கதர் பலர், சிறந்த பிராமண்யர்களாயினர்; வேதங்களில் சிறந்த மாணவர்களாயினர்; தவம் மேற்கொள்ளலாயினர்; அத்தகையோர் பிரம்மராக்கதர் என அழைக்கப்பட்டனர்; அகத்தியர்களும், விசுவாமித்ரர்களும், இவ்வினத்தைச் சேர்ந்தவர்களாவர். நம் முள் ஒருவனாக இராவணனையும் கொண்ட "பெளலஸ்த்யர்'களும் "நைற்றகர்"களும் பிரம்மராக்கதர்கள்தாம். (பர்கிதர் அவர்கள் நூல் : பக்கம் : 242 காண்க) . . .

   அயோத்திக்குத் திரும்புமாறு இராமனைத்தூண்ட

விரும்பியதைத் தொடர்ந்து, பரதன், படையொடு சென்ற