பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழர் வரலாறு

திருமணப்பந்தற்கீழ் வரவேற்றல், அகநானூற்றில் (86) விளங்க உரைக்கப்பட்டுள்ளது. நிரைகால்தண் பெரும் பந்தல் . முருகனை வழிபடும்போது, அவனுக்கு அளிக்கும் பலியாக, திருமுருகாற்றுப் படையில் (233-34) உரைக்கப் பட்டிருக்கும் இரத்தத்தோடு கலந்த சோற்றிற்கு ' குருதி யோடு விரஇய து வெள்ளரிசி, சில் பலிச் செய்து’ - பார்ப்பனர்கள் கொண்ட மாற்றுப் பொருள், செந்நிறம் ஊட்டிய சோற்று உருண்டை இப்பழக்க வழக்கங்கள் பழைய ஆரிய வந்தேறிகள் மணந்து கொண்ட தஸ்யூக்களின் பெண்களால், ஆரிய விவாகச் சடங்குகளில் துழைக்கப்பட்டிருக்க வேண்டும். தென்னிந்திய ஆரியர்களின் வாழ்க்கை நெறிச் சட்டங்களை வகுத்தளித்துவரும், பிற்காலச் சூத்ரகாரர்களில் ஒருவரும் ஆகிய ஆபஸ்தம்பர், 'சூத்திரர்களும், பெண்டிரும் கொண்டிருக்கும். இவ்வறிவு அனைத்தும், கற்று முடித்துப் பெற்ற ஒன்று' எனக் கூறுமளவு, இவை போலும் மிகப் பழைய தஸ்யூ மணச்சடங்குகள், அத்துணைப் புனிதம் வாய்ந்தவையாக மதிக்கப்பட்டன. (சானிஷ்டஹா யா வத்யா ஸ்த்ரீஸ் ஸுத்ரொஷ்ரக.' (தரும சாத்திரம்) தென்னிந்திய மகளிர், தங்களுடைய வடக்கத்திய உடன் பிறப்புகளுக்குத் தெரியாத பிறிதொரு வழக்கத்தையும்-சேலையைக் கால் களுக்கு இடையே நுழைத்துக் கட்டும், அதாவது கச்சம் கட்டும் வழக்கத்தைச் சமய நெறியாகவே கொண்டு பின்பற்றி வருகின்றனர். இது பிராமண இனத்து மகளிர் தவிர்த்து, வேறு இனத்து மகளிர்களால் பின்பற்றப் படுவதில்லை. ஆகவே, இஃது ஒரு தஸ்யூ வழக்க மன்று. உறுதியாக-தம் முடைய ஆரியக் கணவன்மார், கச்சத்திற்குச், சிறப்பான புனிதத் தனித்தன்மை சேர்த்திருப்பதால், அவர்களுடைய மனைவிமார், தொடக்க காலத்தில், மணமாகாத, மறுபிறவியினராகாத தஸ்யூ சகோதரிகளிலிருந்து தங்களை வேறு பிரித்துக்காட்ட, கணவர் செய்ததையே செய்துகாட்ட இது வந்தது போலும்.

ஓர் அறிவார்ந்த விளக்கம்:

விசாகப் பட்டினம் ஜமீன் மேலாளர், திருவாளர். ஜெய்ப்பூர். ஜி. ராமதாஸ் பந்துலு என்பவர், இராவணன்