பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழர் வரலாறு

மடிப்புக் கலையாமல் அலையலையாகத் தொங்கும் சிவப்பு மேலங்கி, தோலால் ஆன மெய்யுறைகளைக் கொண்டு நுட்பமாகச் செய்யப்பட்டவையாம். (Thurston's Castes and Tribes. 3 : பக்கம். 364) நடனத்தின்போது, மான் காட்டெருமைகளின் கொம்புகளையும் சிலர் தலையில் அணிந்து கொள்கின்றனர். (Central probinces Gazeteers, Chatisganu Fenudatory States. Page : 51.) .

இராவணனின் பத்துத் தலைகள் பற்றிய ஐயம் தீர்த்துக் தெளிவளிக்கும் குறிப்பீடு ஒன்றையும் திருவாளர், பந்துலு அவர்கள் கொண்டுள்ளார். 'தஸாஸ்ய' 'தஸ்க்ரீவ' என்ற சொற்களின் தவறான் பொருள்கோளே. இராவணனுடைய பத்துத்தலைகளுக்குக் காரணம் என நீண்ட நாட்களாக யூகிக்கப்பட்டுவருகிறது. இவ்விரு சொற்களின் பிறப்பியல்பு குறித்து ஏற்கக் கூடிய விளக்கத்தைப் பந்துலு அவர்கள் தருகிறார். -

'தஸாஸ்ய என்பது இராவணனுக்குச் சூட்டப்பட்ட ஒரு பெயர். அதுவும் அதனோடு இனத் தொடர்புடைய த்ஸ்க்ரீவ த்ஸானன என்ற சொல் வடிவங்களும் பத்துத் தலைகளைக் குறிப்பனவாகப் பொருள் கொள்ளப் பட்டுள்ளன. அதன் விளைவாக இராவணன் எப்போதும் பத்துத் தலைகளையுடைய கொடுமை செய்யும் பேயாகவே உருவகம் செய்யப்பட்டு வந்துள்ளான். ஆனால் வால்மீகி தம்முடைய நூலில் எங்கும் அவ்வாறு விளக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு தலையும் இரு கைகளும் உடையவனாகவே அவனைக் காட்டியுள்ளார். அங்ஙனமாகவும் அரக்கர் தலைவனுடைய இந்தப் பெயர்களுக்கு உரையாசிரியர்கள் கொடுக்கும் விளக்கம் எவ்வகையில் முறையாகும்? இவ்விரு சொற்கள் குறிக்கும் சிறப்புப் பொருள் முற்றிலும் வேறாகவே இருக்கவேண்டும். அவ்வாறே தஸாஸ்ய', 'தஸக்ரீவ என்ற இவ்விரு சொற்களும் வீரகாவியத்தில் ஆளப்பட்டிருக்கும் இடங்களை நோக்க அவை யாருக்குச் சூட்டப்படுகின்றனவோ அவர்களின் குறிப்