பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழர் வரலாறு

நிச்சயமாக அதே பொருளையுடையதுதான். 'ஸ' அல்லது 'அஸி' என்பது, கூயி மொழியில் இடப்பெயர் விகுதி ஆகும். மூலச் சொல்லாகிய தஸாஸி அல்லது தலாஸ் சமஸ்கிருதத்தில் 'தஸாஸ்ய என எளிதில் ஆகிவிடும். இராவணன் 'ஒரு "தஸாஸி' அதாவது அல்லல் உறுத்தும் ஒரு மனிதன்.

கூயி மொழியில் 'கிவ' என்பது ஒரு வினைச்சொல் விகுதி; தஸ-கிவ என்பது அல்லல் உறுத்துவதற்கு; திய-கிவ என்பது சின மூட்டுவதற்கு 'வேப-கிவ’ என்பது கொல்லுவதற்கு அல்லது மோதுவதற்கு; 'ஒப-கிவ' என்பது எடுத்துக் கொள்வதற்கு. "பண்டி-கிவ’ என்பது ஏமாற்றுவதற்கு ஆகிய இவை, பெயர்களோடு "கிவ' என்பதை இணைப்பதால் உருவாகும் கூயி மொழி வினையெச்சங்களுக்கான எடுத்துக்காட்டுகள். 'தஸ்கிவ’ என்பது "தஸ்க்ரீவ' என எளிதில் ஆகிவிடும். தஸ்க்ரீவஹ் ப்ரதாபவான் என்ற சொற்றொடர் அவன் பெருமை அல்லது புகழெல்லாம் பிறரைத் துன்புறுத்துவதே என்பதை அறிவுறுத்துகிறது. இராவணன் தோள் மீது பத்துத்தலைகளை வைக்கும் பொருள் கோளினும், இப்பொருள்கோள், இராவணன் இயல்போடு மிகவும் பொருந்துவதாம்.


1. இவ்விளக்கத்திற்காக, தமிழ்ச் சொல் விளக்க அகராதி (Tamil Lexicon) துணை ஆசிரியர், திருவாளர் பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன்.

2. இது பற்றிய நுண்ணிய ஆய்வுக்கு மேலே எடுத்துக்காட்டப்பட்ட திரு. லாஸன் அவர்களின் கூற்று எடுக்கப்பட்ட திரு. மூரி அவர்களின் ஸமஸ்கிருத மூல பாடங்கள் (Mwiris Original Sanskrit Text,)என்ற நூலினைக்(பகுதி: 4 பகக்ம்: 164-182) காண்க. அந்நூலின் 441-491 பக்கங்களும் ஆய்வுக்கு உரியவே.

3. இந்த ஜாதகக் கதை எழுதப்பட்டது எந்தத் தேதியேயாயினும் அக்கதை நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வந்துள்ளது.