பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனும் தென் இந்தியாவும்

91


நடந்திருக்க இயலாத ஒன்று. அக் காலத்தில், சேர, சோழ, பாண்டியப் பழங்குடியினர் இருந்திருக்க இயலும். ஆனால், அக் குடிகளிலிருந்து தோன்றிய அரச இனங்கள் இருந்திருக்க இயலாது'. “A Probably political, consequence of the pacification of south India by Rama was, we may presume. the rise of the three great royal dynasties of sola, sera, and pandya. Though these names occur in the Ramayana, it is . certain, that the dynasties could not have flourished in the ages, when the three Ravana's that are mentioned in the, . puranas ruled. These Ravanas apparently wielded unrestricted sway all over south India. Janasthana, on the bank of the Godavari, was one of the outposts of the latest Ravana. His subject swarmed all south of the vindhyas and stray bodies of them, frequently entered Aryavartha, with in the boundaries of this realm, it was. not possible for other dynasties to rule. The three tribes, Solas, seres, pandyas perhaps existed at time; but the royal dynasties that rose out of them did not” (History of the Tamils ; Page : 85)

தமிழ் அரச இனங்கள் மூன்றும், தென்னிந்தியா, ஶ்ரீ ராமனால் அமைதியுறப் பெற்ற பின்னர், ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன்.

(I have assumed that the three Tamil dynasties rose to power, after the pacification of south India by Sri. Rama” Page : 150)

இதற்கு ஆதாரமாக அவர் காட்டும் காரணங்கள் பின் வருவன :

1. கோதவரிக்குத் தெற்கே உள்ள அனைத்து இந்தியாவும், இராவணன் ஆட்சியின் கீழ் இருந்தது.

2. பொறாமையும்,பேராற்றலும் வாய்ந்த, இராவணன், தன் நாட்டின் வாயிற்புறத்தே பாண்டிய அரசு இடம்