பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தமிழர் வரலாறு

அவர்கள் அங்கேயே நிலைத்த குடியினராய் வாழ்ந்திருந்தனர் எனல் பொருந்தாது. .

மேலும், அவர்கள் விந்தியத்திற்கு வடக்கிலும் சென்று திரிந்து வந்தாலும் குமரிமுதல், விந்திய வடபால் வரையான நாடுகளில் இருந்த எந்த அரசோடும் மோதிக் கொண்டாரல்லர். ஒருமுறை , கிட்கிந்தைக் காவலன், வாலியோடு மோத அகற்கான பலனை அனுபவித்துவிட்டான் இராவணன். தன்னோடு மோதிய இராவணனை, வாலி, தன் வாலில் வலித்துக்கொண்டவாறே வழக்கம் போல் எட்டு மலைகளுக்கும் தாவித் தாவிச் சென்று வழிபாடாற்றினான். இராவணன் என்பான் தன்னைச் சுந்திரத்தோள்களோடும், வாலிடைத் துாங்கச் சுற்றிச், சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்’’ எனக், கம்பரும் அது கூறுவது காண்க. (அங்கதன் துாது:24)

அவ்வகையால் வாலியிடம் பட்ட அடி, அரக்கர்குலக் காவலன் உடலிலும், உள்ளத்திலும் ஆழமாகப் பட்டுவிட்டமையால், நாடாளும் காவலர் எவரோடும் மோதிக்கொள்ளும் எண்ணத்தை, அதன் பின்னர், அவனோ, அவன் குலத்தவரோ கனவிலும் கருதினாரல்லர் போலும். ஆகவே, கோதாவரிக்குத் தெற்கே உள்ள அனைத்து இந்தியாவும் இராவணன் ஆட்சியின் கீழ் இருந்தது என்ற கூற்றில் உண்மை இல்லை என உணர்க.

2. பொறாமையும், பேராற்றலும் வாய்ந்த இராவணன் தன் நாட்டின் வாயிற்புறத்தே பாண்டிய அரசு இடப் பெற்றிருப்பதை ஒரு கணமேனும் தாங்கிக் கொண்டிருந்திருக்க மாட்டான் என்ற காரணமும் ஏற்புடையதாகாது. இராவணன் வாழ்க்கை வரலாறு இதற்குத் துணை புரிவதாக இல்லை. மேலே கூறியவாறு, அரக்கர் நடமாட்டம், குமரி முதல், விந்தியத்திற்கு வடக்கில் உள்ள நாடுகள் வரையும் இருந்துவந்தது. திருவாளர் பி. டி. எஸ் அவர்கள் கூற்றுப்படி, இங்கெல்லாம் அவர் செல்வாக்குப் பெருகவே இருந்தது: ஆனால், அரக்கர்களின் செல்வாக்குப் பெருகியிருந்த அப்பெரு நிலப்பரப்பின் இடையேதான் கிட்கித்தை என்ற நாடும்