பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

வேதகாலத்து ஆரியர்களாம் ரிஷிகளால், தஸ்யூக்கள் என அழைக்கப்பட்ட திராவிடர்களைப் பற்றி, அந்த ரிஷிகள் பேசும்போது, அவர்கள் அவர்களின் பகைவர் குறித்துப் பேசுகின்றனர் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். கடும் வெறுப்பு காரணமாக, திராவிடர்களைப் பற்றி மிகைப்படப் பழித்துக் கூறும் அவர்களின் கூற்றுக்களுக்கிடையேதான் திராவிடர்களின் உண்மையான சிறப்பினை உய்த்துணர வேண்டும், வேதங்களிலும், இராமாயணம் போலும் வீர காவியங்களிலும், புராணக் கட்டுக் கதைகளிலும், தஸ்யூக்கள், அரசர்களின் காட்டுமிராண்டித்தனம் பற்றிய பழிப்புரைகளுக்கு இடையிடையே, அவர்களுடைய உயர்ந்த நாகரீக வாழ்க்கை, கோட்டை நிகர் மாளிகைகள், பொன் அணிகள், செல்வ வளங்கள், மற்றும் பிற நலங்கள் பற்றிய எண்ணற்ற குறிப்புகளும் உள்ளன என்பதையும் மறத்தல் கூடாது. ஆக, அத் தஸ்யூக்கள், நாடு கடத்தப்பட்டும். வாழிடம் தேடியும், வந்த ஆரிய வந்தேறிகளால் நாகரீகம் பெறக் காத்திருந்த நாகரீகம் கல்லாக், காட்டுமிராண்டிப் பழங்குடியினர் அல்லர்" என கூறுவதன் மூலம் (பக்கம் 32) ஆரியர் வருகைக்குமுன்னரே, நாகரீகம் பெற்ற பெருமைக்கு உரியவர் தமிழர் என்பதைப் பறைசாற்றியுள்ளார்.

In the Vedic mantras and in the Epic and Puranic legends, side by side with denunciations of the savagery of the Dasyus and Rakshasas, there are innumerable passages referring to their higher civilization their castles, their gold ornaments, their wealth etc. Hence they were not barbarous aborigines, waiting to be civilized by Aryans exiles or stray Aryan immigrants”. Page 32.

இவ்விலக்கிய மரபுகளிலிருந்து, மக்கள் மேற்கொண்டிருந்த, உண்மை வாழ்க்கை நிலையை, பாவாணர்கள் பாடிய பாக்கள், உள்ளது உள்ளவாறே எடுத்துக் காட்டிய அக் காலங்களுக்குக் கற்பனையில் பின் நோக்கிச் செல்லலாம். அந்தக் காலக் கட்டத்திலிருந்து, பாக்கள் எழுதுவதற்கு