பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தமிழர் வரலாறு

புணர்ச்சிக்கு முந்திய களவுக்காதல், குறிஞ்சித் திணைப் பாடல்கள் என்ற ஒருவகை பாடல்களுக்கு மட்டுமே கருப் பொருளாதல் வேண்டும், மலை நாட்டு மாவின மரவினங்களோடும், இலை ஆடைகளைத் தருவதோடும், காதல் நோய்க்கு, அப்பெண்ணைக் கொண்டுவிட்ட மலை நாட்டுக் கடவுளாம் முருகனையே காரணம் காட்டி, வெறியாடல் மூலம், அந்நோய் தீர்த்தலோடும் மட்டுமே தொடர்பு படுத்தல் வேண்டும், என்பது இலக்கியமாகிவிட்டது; . உண்மைக்காதல் ஒழுக்கத்தின் ஒரே சீரானபோக்கில் அமையாத இந்நிகழ்ச்சிகளெல்லாம், குறிஞ்சித்திணைப் பாக்களின் கருப்பொருளாக வகைப்படுத்தி வகுக்கப்பட்டன.

அதுபோலவே, கால்நடைகளைக் காத்தற்பொருட்டு ஆயன் பிரிந்து செல்வது போலவும் சிறு பிரிவுகளால் நேரும் கடுந்துயரும், இருவரும் பின்னர் இணைந்த வழிப் பிறக்கும் பெருமகிழ்ச்சியும் (காட்டோடும் காடுசார்ந்த நிலத்தோடும் - தொடர்புடையதான முல்லைத் திணைப் பாடல்களின் கரும்பு பொருள்களாக) முடிவு செய்யப்பட்டன; முல்லைத்திணைப் பாக்கள், தம்முடைய கற்பனைகளை, அம்மேய்ப்புலத்து இயற்கைப் பொருள்கள் பழக்கவழக்கங்கலிருந்தே பெற்றுக் கொண்டன.

நெய்தல் திணைப்பாடல்கள், மீன் பிடி பெருந்தொழில் இன்றியமையாததாக ஆக்கி விட்ட நெடும் பிரிவு, உலர்ந்த மீனாம் கருவாட்டு நாற்றத்தை இடைவிடாது வெளிப்படுத்தும், கருமை நிறம் மின்னும் மேனி அழகியாள்பால் அன்புகாட்டல் ஆகியவற்றைப் பாடற் பொருளாக்குகின்றன. வரண்ட பாலைத் திணைப்பாடல்கள், பெருமணல் பரந்து, இடையீடின்றி நீண்ட, வரண்ட நிலப்பரப்பில் வாழ்வோரின், கொள்ளையடித்துண்ணும் வாழ்க்கையின் இடை நிகழ்வாம் நெடும்பிரிவின் தொடர்பாகப் பிறந்தன ஆகவே, நெடும் பிரிவு தரும் கடுந்துயர் பாலை பாக்களின் கருப்பொருள் ஆயின.