பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.மு. இரண்டாவது ... தமிழர் நாகரீகம் 111 தமிழர்கள், மலர்களில் பேரின்பம் கண்டனர்; தங்களைத், தங்கள் தொழிற்கருவிகளை, ஏனைய உடமைகளைத், தங்கள் வீடுகளைப், பந்தல்களை, நனிமிகப் பழங்காலம் தொட்டே, இலைகளாலும், மலர்களாலும் அழகு செய்தனர்.

    கொடிகள், இலைகள். மலர்கள், விலங்குகள் போலும் வடிவங்களைச் செதுக்குவதன்மூலம், தங்களுடைய தொழிற் கருவிகள், வீடுகள், தட்டுமுட்டுப் பொருள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை அழகு செய்ததற்கும், இயற்கைப் பொருள்கள் மீது கொண்ட அதே காதல்தான் காரணமாம். இன்றைய நாட்களில் தான், தமிழர் வீடுகளில், அழகிழந்த, அணி நலன் இழந்த, விசைப் பொறிகள் வனைந்து குவிக்கும் பண்டங்கள், அணி அழகு மிக்க பண்டைய பண்டங்களுக்கு மாற்றாக இடம் பெற்றன. இன்றைய நவ நாகரீக வாழ்க்கையை மேற் கொண்டு விட்டோர் உள்ளங்களிலிருந்து, கவின் கலையுணர் வைத்துடைத்து அழித்து விடுகின்றன. தங்கள் பாடல்களில் போலவே, தங்கள் வாழ்க்கையிலும், தங்கள் எண்ணங் களை, அடையாள வடிவில் வெளிப்பட உணர்த்தும், மலர் களின் மொழி ஒன்றைத் தமிழர் வளர்த்தனர்.

இலக்கிய மரபுகளின் முறையான வளர்ச்சி :

 பாக்களின், இவைபோலும் பல்வேறு மரபுகளெல்லாம், தொல்காப்பியம் பொருள்திகாரத்தில் விளக்கியவாறே, (இனி வெளிவரவிருக்கும், "பண்டைத் த மிழர்கள்" (Ancient Tamils) என்ற நூலில் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. ஆகவே, அவ் விலக்கண நூலில் விளக்கிக் கூறப்பட்டிருக்கும் இலக்கிய மரபுகள், கீழே குறிப்பிட்டிருக்கும் கால கட்ட வரிசையில்தான் வளர்ந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது ஒன்றையே ஈண்டுக் கருத்தில் கொண்டுள்ளேன்.
 1) மனித நாகரீகத்தின் ஐந்து படிநிலைகளும், இயற்கை நிலப் பகுதிகள் ஐந்திலும் உருப்பெற்று மெல்ல மெல்ல வளர்ந்த காலகட்டம். (இது ஆயிரம் ஆயிரம் ஆண்டு