பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழர் வரலாறு

மூறை, இடம் பெற்று விடுவது இயல்பே. இவ்வகையான உறவுக் கட்டுப்பாடல்லாமல், பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள் பால், இவ்வினப் பெண்டிர் காட்டும் பற்றுமே, பழங்குடி இனம் பிற்காலத்தே சாதியாக மாறியதற்குக் காரணமாம். பழங்குடி இனத்தவர் தலைவா அல்லது அரசனின் செல்வாக்கும், பழங்குடியினர் பழக்க வழக்கங்களை, அழியா நிலைபேறுடையதாக ஆக்கத்துணை நின்றது: ஆட்சிமுறை அறிவு, வளர்ந்திருந்தது, அல்லது நூல் வழியிலோ, அல்லது நடைமுறையிலோ, ஒருவகை ஆட்சிமுறை பின்பற்றப்பட்டது என்பதை உணர்த்த, பண்டைத் தமிழ்ப் பாக்களிலோ, தொல்காப்பியப் பொருளதிகாரத்திலோ எதுவும் இல்லையாகவே, பழங்குடித் தலைவனின் அரசுரிமை, நாகரீக வளர்ச்சி பெறாக் காட்டுந்தன இயல்பின தாகும்.

ஒவ்வொரு நிலத்துக்குமான கவி மரபுகள் :-

பல்வேறு நிலங்களுக்கும் உரிய தெய்வங்கள், அந்நிலங்களுக்கு உரிய கருப்பொருள்களில், முதல்வனவாகக் கூறப்படுகின்றன. திறனாய்வுக்காக, அவை, உடனடியாக எடுத்துக் கொள்ளப்படும். அவை தவிர்த்த ஏனைய கருப் பொருள்கள், அந்நிலம் ஒவ்வொன்றிற்கும்; அந்நிலம் பற்றிய பாக்களுக்கும் உரியனவாய, உணவுப் பொருள்கள், மாவினங்கள், மரவினங்கள், பறவைகள், பறைகள், தொழில்கள், யாழ்கள் முதலியனவாம்.

“தெய்வம், உணாவே; மா, மரம், புள், பறை,
செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப”.

தொல்காப்பியம் : பொருளதிகாரம் : 18

அக்கருப்பொருள்களை வரிசைப்படுத்திக் காண்பது, பழந்தமிழ்ப் புலவர்கள், எத்துணை நுண்ணிய நோக்கர்கள், இயற்கையோடு உண்மையான உறவு கொண்டிருப்பதில் எத்துணை ஆர்வமுடையவர்கள் என்பதைக் காட்டுகிறது. முல்லைக்கு உரிய உணவு, வரகும் சாமையும் அவரையும்,