பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

தமிழர் வரலாறு

தாழை முதலியன. பறவை : கழுகும், பருந்தும், புறாவும் ; தொழில் : ஆறலைத்தலும், சூறை கோடலும் ; மலர்கள் ! மரா, குரா, பாதிரி ஆகியனவ ; நீர் ; அறுநீர்க் கூவலும் சுனையும். இப்பொருள்களும், தொழில்களும், அவ்வவற்றின் திணைகளுக்குரிய பாக்களில் இடம் பெற்றிருப்பதற்கான எடுத்துக்காட்டுகள், அடுத்துவரும் பல அதிகாரங்களில், மேற்கோள்களாகக் கொடுக்கப்படும் செய்யுட்களில் காணலாம்.

சமயம் :-

மனிதன், தொழிற்கருவிகளையும், உணவு சமைக்கும், ஆடை நெய்யும், சொல் வழங்கும் உயிரினம் மட்டுமல்லன், சமய உணர்வு வாய்ந்த உயிரினமும் ஆவான். உயிரினங்கள் அனைத்திலும், மனிதன் ஒருவன் தான், தன்னை அச்சுறுத்தும் உண்மையான அல்லது கற்பனையான இன்னல்களைத் தீர்த்துத், தான் நீண்ட காலமாக, ஆர்வத்தோடு அவாவி நிற்கும் பெரும் பொருளைக் கொடுத்தருளுமாறு எல்லாவற்றுக்கும் மேலான இறைவன் துணையை வழிபாட்டின் மூலம் வேண்டும், அல்லது வற்புறுத்தும் முறையைக் கண்டவன்.

இச் சமய வழிமுறைகளெல்லாம் சமயச் சார்புடைய மாமந்திர வழிபாடுகள், சமயங்களுக்கிடையே, உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை காணல், பாராட்டும், காணிக்கை வழங்கலுமாகிய முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மனிதன், கட்டளைகளுக்கு, இயற்கையின் ஆற்றல்களைப் பணியுமாறு வற்புறுத்தும் வழி முறையாய் மாயா ஜால அநாகரீகக் காட்டு முறை பிற்பட்ட நாகரீக நிலையைச் சாந்ததாம். இச்சமயச் சடங்கு முறை என்பது, சமயச் சார்பான விருந்து [இது, உண்ணா நோன்பைத் தொடர்தலும் கூடும்] சமயச் சார்பான பாடல் கூட்டாகவும் தனித்தும் சமயச் சார்பான ஆடல்களை உள்ளடக்கியதாம். பிற் காலத்தில், விருந்து, பாடல், ஆடல், நாடகம் ஆகியவை, சமய, நெறியிலிருந்து பறிக்கப்பட்டு, உடனடி இன்ப நுகர்வுக்காக மேற்கொள்ளும் செயல்களாக ஆக்கப்பட்டு விட்டன