பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

The Three ancient powers of taia, Cera and Pandyal rose probably as a result of the extinction of Ravana's rule after the age of Ramayana. Page 54.

2. இராமன், சீதையைத் தேடி அலைந்த காலம் முழுவதும், அகஸ்தியர் கோதாவரிக்கரைப் பஞ்சவடியிலிருந்து இரண்டு யோஜனை தொலைவில் உள்ள ஆஸ்ரமத்திலேயே வாழ்ந்து வந்தார். ஆனால், சீதையைத் தேடுமாறு, சுக்கிரீவன் வானரங்களைத் தென்னாடு நோக்கி அனுப்பிய போது, அங்கே, காவிரி ஆற்றையும், அதை அடுத்துள்ள மலையமலை உச்சியில் வீற்றிருக்கும் அகஸ்தியரையும் காண்பீர்கள் என்று கூறியுள்ளான். ஈண்டு இராவணன், சீதையைத் தூக்கி சென்றது போல, அகஸ்தியர் பஞ்சவடியிலிருந்து, மலைய மலைக்குத் தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.

Agastya's asrama during the whole period of wandering of Rama, was two yojanas from pancavati. yet when sugriva sent his vanaras to the south to search for sita, we told them they would see kaveri., near by they would see seated on the top of Malaya hill, Agastya... Hence we see Agastya spirited away, by the poet, as sita was by Ravana, from panchavadi, and dropped on the top of the malaya hill. Page 56.

3. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம், கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க முடியாது.

Tolkappiyam by Tolkapplyanar was probably composed not latter then the I or ll century A. D. Page 70.

4. ஆரியர்கள், தென்னாட்டின் நிலைத்த குடியினர் ஆனது மட்டும் அல்லாமல், தமிழ் மொழியைக் கற்று, அதன் இலக்கியங்களைப் படித்து, அவற்றின் இலக்கண நெறியை ஆராயத் தொடங்கிய பின்னரே, தமிழ் இலக்கியம் எழுத்துருவம் பெற்றிருக்கவேண்டும்.