பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. மு. இரண்டாவது ... தமிழர் நாகரீகம்

127

குடும்பத் தலைவியாகக் கொண்ட சமுதாய முறை, நெடுங் காலம் நிலை பெற்றிருக்கும் நிலப்பகுதி, இது. ஆகவே, இந்நிலத் தெய்வம். வெற்றிப் பெண் தெய்வமாம். கொற்றவை. அவள் வழிபாட்டாளராம் கொடுந்தொழில் புரியும் மறவர், அவளுக்கு, மனிதனையும், விலங்குகளையும் கொன்று குருதிப் பலி தருவர். பாலை ஒரு வரண்ட நிலம் : அதற்கேற்ப, காதலியின் காலடியில் சேர்ப்பதற்குப் பெரும் பொருள் தேடுவான். வேண்டி, இறந்தோர்களின் வெள்ளெலும்புகள் சிதறுண்டு கிடக்கும் மணல் பரந்த நெடுவழியில் பயணம் செய்யும் காலத்தில், காதலிகள் நெடிது பிரிந்து வாழ் நேர்வதாம், காதல் அவலத்தோடு, பொறுத்த முறத் தொடர்பு கொண்டுள்ளது. கற்பனை கடந்த நிலையில், பெருங்கள்ளோடும் களியாட்டங்களோடும், கொற்றவை வழிபடப்படுவாள்.

இந்த ஐந்து கடவுள்களில், நான்கு கடவுள்களைத் தொல்காப்பியனார் வரிசைப்படுத்தியுள்ளார். மாயோனால் விரும்பப்பட்டது காட்டுவளம்; சேயோனால் விரும்பப்பட்டது. மலைநாடு ; இனிய நீர் பாயும் புனல் நாடு, கடவுளர்க்குக் கடவுளாம் வேந்தனால் விரும்பப்பட்டது. வருணனால் விரும்பப்பட்டது, பெருமணல் உலகம் ; இந் நான்கு உலகமும், முறையே, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என அழைக்கப் பெறும்.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்,
வருணன் மேய பெருமணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”. -
-தொல்காப்பியம் ; பொருளதிகாரம் : 5


தொல் காப்பியனார், பழந்தமிழ்க் கடவுள்களை, அவற்றோடு நேரொத்த ஆரியக் கடவுள்களாக அடையாளம் கண்டு, ஆரியர்களுக்குச் சுவர்க்கத்தின் கடவுள், தேவர்க்கு அரசனே.