பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழர் வரலாறு

முன்னரே வழிபட்டனர் தமிழர். கிருஷ்ணனுக்கு எண்ணிலாக் கோயில்கள் உள்ள வடஇந்தியாவில், பலதேவனுக்குக் கோயிலே இல்லை. ஆனால் மாயோன் கோயிலை அடுத்துக் கட்டப்பெற்ற பலதேவன் கோயில், காவிரிப்பூம் பட்டினத்திலும், மதுரையிலும், சங்ககாலத்திலேயே இருந்தது. பலதேவனுக்கு உரிய கொடி, பனைக்கொடி. பனை மரம் கங்கை வெளியில் வளர்வதில்லை. மணல்பரந்த தமிழ்நாட்டு ஆற்றங்கரைகளிலேயே வளரும். கூறிய இக்காரணங்களைக் கொண்டு நோக்கிய வழி, அர்மீனியாவில், கி. மு, இரண்டாம் நூற்றாண்டில் இடங்கொண்டிருந்த அவ்வழிபாட்டு முறை, தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்வணிகர்களாலேயே கொண்டு: செல்லப்பட்டது என்பது உறுதியாகிறது.”

“In the time of the first Arsacide monarch of Armenia Valarghak {149-127 B.C), two Indian Chiefs established & colony, at Vishap, on the western Euphrates, west of lake Van, and founded temples for tha worship of “Gisani (Krishna) and “Demeter” (Baldeva)., Was this an outflow of Aryan culture' from the north of India? Most probably no, for while the puranas talk of Krishna and Baladeva as being avatars of Vishnu, there is little or no evidence of the joint worship of these two gods, as a separate cult in North at any time. But in early Tamil literature gives plenty of evidence of this. The former of these under the name of Mayon was the ancient god of Mullai land and the latter, Valiyon or Vellaiyon, the white god, whose implement was the plough and the flag was the palmyra......... The cult of Baladeva could not have been evolved in the gangetic Vallay; for the palms do not flourish there and his worship must have risan in the Southern lower river valleys, not far from the sea“.

“We do not hear of temples dedicated to Baladeva in North India. But they existed in Kaviripattinam and in Madurai aide by sidewith temples to Krishna. Besides these there, were