பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

temples, where the images of Krishna and Baladeva stood together,” (History of the Tamils; pages: 202, 203, 204)

இந்தியா, ஐரோப்பாவோடு மேற்கண்ட வாணிகத்தில், கி. மு. 500இல், கிரேக்கர்கள் இடைத்தகர் ஆயினர். அதன் விளைவாக, அரிசி என்ற தமிழ்ச்சொல், “ஒரயஸ்” என்ற வடிவிலும், கருவாப்பட்டையைக் குறிக்கும் கருவா என்ற தமிழ்ச்சொல், “கார்பியன்” என்ற வடிவிலும், இஞ்சி வேர் எனும் சொல், “ஜிக்கிபெரொஸ்”, என்ற வடிவிலும், வைடூரியம் எனும் சொல், “பெரியலொஸ்” என்ற வடிவிலும் கிரேக்க மொழிகளில் இடம் பெற்று விட்டன .

(“The Greeks were the greatest intermediaries of this trade of India, with Europe, in the hasf-mislennium, that preceded the birth of Christ. One result of this extensive international Commercial intercourse was, that the Tamil names of south Indian articles of trade were borrowed by the Hellenes; they begin to appear in the works of Sophocles. Aristophanes and others. They are '.“Oryza” from Tamil“arisi”, “Karpion”, from “Karuva”, Chinnamon;. “Ziggiberos" from Tamil “Ingiver” ginger. “" from Tamil “Pippli". long pepper; “beryllos” from “vaidurya”. (pages ; 193, 194)

“கி.மு. பத்தாம் நூற்றாண்டில், மன்னன் சாலமனுக்கு, ஷீபா அரசியார் அளித்தனவற்றுள், நறுமணப் பொருள்கள், விலைமதிக்கவொண்ணா மாணிக்கங்களும் இடம்பெற்றிருந்தன. சாலமனுக்குரிய கலங்கள், மூன்று ஆண்டிற்கு ஒருமுறை, பொன், வெள்ளி, தந்தம், அகில், சந்தனமரங்கள், வாலில்லாக் குரங்கு, தோகையழகு வாய்ந்த மயில்கள் முதலாம் பொருட்களை வாரிக்கொண்டுவந்தன. தமிழ் வணிகர். தமிழ்நாட்டுப் பொருட்களையேயல்லாமல், அவற்றின் தமிழ்ப் பெயர்களையும் ஆண்டு கொண்டு சென்றனர்; அகில் என்ற தமிழ்ச் சொல் “அகல்” என்ற