பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

139

ஒப்பனைப் பொருளாகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.”

“The articles much used for decoration in the Vedic Age, was the product of the extremest south, viz; the pearl.” page:22)

எனக்கூறிவிட்டு, அதை உறுதி செய்ய, இருக்குவேதத்திலிருந்து எண்ணற்ற சுலோகங்களை, அகச்சான்றுகளாக எடுத்துக் காட்டியுள்ளார், திருவாளர் அய்யங்கார். இது கூறிய அவர், அம்முத்திற்குச் சமஸ்கிருதம் இட்டு, வழங்கும் பெயர் முத்தா என்பது. இது வேத இலக்கியங்களில், ஒரிடத்தில் “விமுத்தா” என இடப்பெற்றுளது:

(“Another sanskrit name for it is mukta; This word occurs in the form ‘Vimukta' in fine Vedic literature”, p. 23)

என்றும் கூறிவிட்டு, அச்சொல்லின் மூலம் குறித்து, மேனாட்டுச் சமஸ்கிருத முதுபெரும் திறனாய்வாளர்களாகிய திருவாளர்கள், மேக்டொனேல் (Macdonel) கெய்த் (Keith) மோனியர் வில்லியம்ஸ் (Monier Williams) ஆகியோர் அளிக்கும் விளக்கங்களை வலுவாக மறுத்துவிட்டு, “முக்தா” என்ற அவ்வடசொல், தமிழ்நாட்டு முத்து என்ற பொருளோடு, கடனாகப்பெற்று, முக்தா எனச் சமஸ்கிருதமாக்கப் பட்ட முத்து என்ற தமிழ்ச் சொல் அல்லது வேறு அன்று என்றும் கூறி முடித்துள்ளார்.


(“Mukta is but the Tamil word muttam, pearl, borrowed and sanskritised.” p. 24)

ஆக, தமிழ்நாட்டின் தென்கோடி விளைபடுபொருளாம் முத்து மட்டுமல்லாமல் அதன் பெயரும், வேதகாலத்தில் அதாவது கி. மு. 3000க்கும், கி. மு. 1500க்கும் இடைப்பட்ட காலத்தில், வடநாடு சென்று, அம்மொழி வழக்காற்றில் இடம்பெற்றுவிட்டது என்பதைத், திருவாளர் பி. டி. எஸ். அவர்களே உறுதிசெய்துள்ளார் என்பது தெளிவாயிற்று.