பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

145

மாமருந்து ஏதேனும், இருப்பின், அது அறிந்து தெரிவித்து. நாங்கள் இருவரும் ஒன்று படத் துணைபுரிவாயாக; அதுவே நண்பனுக்குச் செய்யக் கூடிய நல்லதுணை" எனக் கூறியதான் கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் உளது.

"பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த, தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே"

-குறுந்:156

இப்பாடலில் உலாவரும் அப் பார்ப்பனப் பாங்கனைத் திருவாளர், பி. டி. எஸ். அவர்கள் பார்த்துள்ளார். தம்முடைய நூலில், அவனைப் படம் பிடித்தும் காட்டியுள்ளார், ஆனால், அப்பாட்டின் கருப்பொருள், இடித்துரைத்த பார்ப்பனப் பாங்கனின் அறிவுரையினை ஏற்க மறுத்து மாறாகத், தன் காதல் கைகூடத் துணை நிற்குமாறு தலைவன் வேண்டுவதே ஆகவும், திரு. அய்யங்கார் அவர்கள், அதை அக்கருத்தோடு நோக்காது அது மணமாகாத, பல்கலைவல்ல, ஒரு பார்ப்பன இளைஞனைப் படம் பிடித்துக் காட்டுகிறதேயல்லாது, காதலுக்குத் துணைபோகும் பாங்கன் பணிகுறித்து எதுவும் காட்டவில்லை எனக்கூறித் தட்டிக் கழித்து விட்டுள்ளார். இது, அவர் கருத்துக் குற்றமே யல்லது வேறு அன்று:

"There is one Kurunthokai, to his appurtenances, as a bachelor, but none to his function as minister of love". (Page: 218).

தொல்காப்பியர், கி. பி. முதல் நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்திருக்க இயலாது என்பதற்கான சான்றுகளை, மேலே, கூறியவாறெல்லாம் காட்ட முயன்றிருக்கும் திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார், தொல்காப்பியர், கி. மு;

த.வ-10