பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர் காலம்

149

ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்திருக்க வேண்டும். . இக்காரணங்களால், தொல்காப்பியர், கி. மு. 350க்கு முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்திருக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார், இது அவர் காட்டும் இரண்டாவது காரணம்.

"Again, it will be seen from the following sutras, that at the time of Tolkāppiyar, there were in use, some Tamil words, in the middle of which letter. Combination like lya, lya, jnya, nya, mya, vya, mva, could occur.

"லளஃகான் முன்னர் யவவும் தோன்றும்"-1:24,
"ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகானிற்றல் மெய்பெற் றன்றே"-1:27
"மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும்".1:28

Commenting on these suthras (சூத்திரங்கள்) Nachinarkiniyar writes thus: இங்ங்ன்ம் ஆசிரியர் சூத்திரம் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம்; அவை இக்காலத்து இறந்தன".

Not a single word of the kind referred to in rhe sutras is to be found in the whole range of existing Tamil literature. The earliest work of any magnitude, that is the kural of Thiru valluvar, goes back to the first century A.D., and the period when wuch words were current should have been, at-least three or four centuries before the age of that work. For these reasons, it would not be too much to suppose, that Tholkappiyar flourised before B.C. 850”. (Tamil Studies: Page:118)

திருவாளர் எம். சீனிவாச அய்யங்காரவர்களின் இந் நூலைத், திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்காரவர்கள் பார்த்துப் படித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகளைத், தம்முடைய நூலில் மேற்கோளாகவும் காட்டியுள்ளார். திருவாளர் எம். சீனிவாச அய்யங்கார், அவருடைய தமிழ் ஆராய்ச்சி (Tamil Studies) என்ற நூலின் 287 ஆம் பக்கத்தில், மணக்கிள்ளி குறித்துக் கூறியிருப்பதை ஏற்றுத் தம்முடைய