பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழர் வரலாறு

அவர்கள் இந்திய ஆரியரோடு, இன்று நிலவும் பண்பாட்டுச் சார்பான மனித இனநூல் கொள்கைக்கு முரணாக, நான் கருதுவதற்கேற்ப, கொண்ட உறவு எதுவும் இல்லை. வட நாட்டில் இவ்வாறு, ஆணையிட்டுத் தடுக்கப்பட்டுவிட்ட வணிக அலை, தெற்கு நோக்கி வீசி, இந்தியாவின், குறிப்பாகத், தென் இந்தியாவின் கடல்வழி வாணிகத்து மேல் வளர்ச்சிக்கு வழிவகுத்து விட்டது.

எகிப்து உடனான வாணிகம் :

வாணிகப் பொருளாகவும், கி. மு. 1580 - 1350 இல், பதினேழாவது அரச குலத்து ஆட்சியில், திறைப்பொருளாகவும், தந்தம் பெறப்பட்டதற்கான எண்ணற்ற ஆவணச் சான்றுகள் உள்ளன. ----தந்தம் போலவே, தந்தத்தாலான நாற்காலிகள், மேசைகள், இழுப்பறைப்பெட்டிகள், உருவச் சிலைகளும் பெறப்பட்டன. [Scoff's periplus. page : 61] இவை பல்வேறு இடங்களிலிருந்து வந்தன. அந்நாட்களில் எகிப்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற வாணிகத்தில், பெரிய பொருள் சேமிப்பு இடமாக விளங்கிய, சோமாலிலேண்டைச் சேர்ந்த புன்ட் (punt) அவ்விடங்களில் ஒன்று. இச்செய்தி, பழைய காலத்தில் நிகழ்ந்ததுபோலவே, தந்தமும், தந்தத்தினாலான பொருள்களும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து நைல் பள்ளத்தாக்கிற்குச் சென்றதை உணர்த்துகிறது.

பதினெட்டாவது அரசர் குலமாகிய தேபன் (Theban), அரசகுலத்து ஆட்சியின்போது, சிறந்த எகிப்துக் கப்பற் படைகள், புன்ட் (punt) பகுதிக்கு அனுப்பப்பெற்றன. “அவை திரும்பிவரும்போது, நறுமணப்பொருள் செய்யப் பயன்படும் பிசின், கருங்காலி மரம், தந்தம், பொன், லவங்கம், மணம் கமழும் புகைதரும் பொருள்கள், கண் மை, வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகிய பெரும்பொருட் குவியலோடு வந்தன.” சிரியா நாட்டிலிருந்தும், அரேபியா மற்றும் கிழக்கு நாடு