பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தமிழர் வரலாறு

கூடிய உண்மையான வழிமூலத்தை இடத்தை வெளியிடாமல், இது போலும் உண்மைக் காரணத்தை மேல்நாட்டு வணிகர்களுக்குக் கொடுக்க இயலாது. செல்வச் சீமான்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நறுமணப் பொருளுக்கு வழக்கமான விலையைக் காட்டிலும், அதிக விலையைக் கொடுக்கக், கிரேக்கர்களைத் தூண்டும் குறிக்கோளுக்காகவே, அப்பொருள் கிடைப்பதில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திவிட்டு, அத்தட்டுப்பாட்டிற்குப் பொய்யான, ஆனால் அதே நிலையில் நம்பத் தகுந்ததான விளக்கத்தைத் தருவதில் அரேபியர்கள் வல்லவர் என்பதை உண்மையில் நம்பலாம். மேற்கு இந்தியா அல்லது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வாணிக மையங்களுக்கு வழக்கமாக வந்து செல்லும் அரேபிய வணிகர்களுக்காக, வங்காளம், கொரமண்டலம், மலபார், வடமேற்குப் பகுதிகளைச் சார்ந்த இந்தியர்கள், பெரும்பாலான அப்பொருள்களைச் சீனாவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் கப்பல்களில் கொண்டு வந்திருக்க வேண்டும்.” [Warmington Commerce between the Roman Empire and India, Page : 192-193 ] கிரேக்க, இலத்தீன் மொழி எழுத்தாளர்கள், லவங்கம் முதலாம் பொருள்களின், மூலம் குறித்து எழுதிய குறிப்புகளை, அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதையும், கி. மு. இாண்டாவது ஆயிரத்தாண்டைச் சேர்ந்த எகிப்தியர்கள், சீன, இந்திய லவங்கத்தை ஏடன், சோமாலி கடற்கரைகளில், இந்தியக் கப்பல்களிலிருந்து பெற்றுக் கொண்டனராதலின், எகிப்தியர் நம்பியது போலவும், கிரேக்க வணிகர், பிற்காலத்தே எண்ணியது போலவும், லவங்கம் புண்ட் நாட்டின் அதிசயப் பொருள்களுள் ஒன்றாகாது என்பதையும் இது தெளிவாக்கிவிட்டது.

புண்ட் நாட்டிலிருந்து எகிப்துக்கு வழங்கப்பட்டனவாக, மேலே குறிப்பிடப்பட்ட கீழ் நாட்டு அரும்பொருள்களுள், எண்ணெய், தானியங்கள் ஆகியவை இடம்பெற்றிருப்பதைக் கண்டோம். அவற்றுள், எண்ணெய் பிற்பட்ட காலத்தில், இந்தியாவிலிருந்து, காலம் தவறாமல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டதாகப், பெரிபுளுஸ் மூலம் நாம் தெரிந்து