பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தமிழர் வரலாறு

சீனாவுடனான வாணிகம்:

சீன லவங்கம், இந்தியக் கப்பற்பயணம் மூலம் அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளுக்கு வழிகண்டது எனறால், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில், வாணிகப்போக்குவரவு இருந்திருக்க வேண்டும். இவ்வாணிகம் குறித்த எழுத்துமூல ஆவணங்ள் இல அழியாமல் உள்ளன யுதிஸ்டிரர் பெற்ற திறைப்பொருள்களுள், சீனாவிலிருந்து வந்த பட்டையும் குறிப்பிடுகிறது. மகாபாரதம்: [“சீன கமுத்பவன் அவுர்னம்” மகாபாரதம் : 2 : 51 , 1843] சீன நாட்டு வரலாற்றுப் பதிவேடுகள், கிறிஸ்துவ ஆண்டுத் தொடக்கத்திற்கு முன்னர், ஏறத்தாழ, கி. மு. 12 ஆம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்தில், மலாக்காவோடு கொண்டிருந்த கடற்பயணத்தைக் குறிப்பிடுகின்றன. [Scoff's periplus page : 246] மலேயா இவ் வாணிகத்தின் பொருள்களஞ்சியமாக இருந்து வந்துளது. தமிழ்நாட்டில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு பொருளாம் வெற்றிலை, தமிழர்களால் வரையறையின்றித் தின்னப்படுகிறது என்றாலும், ஆதியில், அஃது ஒர் உள்நாட்டுப் பொருளன்று. தமிழில், அதற்குப் பொருத்தமான, இயல்பான இயற்பெயர் இல்லை. அவிக்காமல் உண்ணக்கூடிய ஒரே இலையாக அது இருப்பதால், வெற்றிலை, அதாவது, வெறும் இலை எனச் செயற்கையாலான ஒரு பெயரினாலேயே, அது குறிக்கப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் பெயர்கள், இடுகுறிப் பெயர், காரணப் பெயர் எனப் பிரித்து வழங்குவதில் காணலாம். பயன் குறித்த ஆய்வுக்கு என்னுடைய ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம் (pre - Arvan Tamil Culture : Page : 13 - 16 என்ற நூலைக் காண்க) பிற இந்திய மொழிகளிலும், பெரும்பாலும், மலேயாவிலிருந்து வந்த அதன் நுழைவு கருதி, அப்பெயர் இடப்பட்டது என்பதைக் காட்டும் வகையில், அது, இலை என்றே அழைக்கப்படுகிறது. (வெற்றிலை உண்ணும் வழக்கத்திற்கான சில பழங்குறிப்புகள், கி. பி;