பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

177


பாட்டு நெறிகளுக்குப் பகையாக அமைந்த பழங்காலத்தில், ஆகமத்திற்கும், வேதத்திற்கும் இடையிலான வேறுபாடு நன்கு உணரப்பட்டது. ஆனால் கடந்த பலநூறு ஆண்டுகாலமாக, அவை இரண்டும் இரண்டறக் கலந்துவிட்டமையால், இக்கால மக்களால், அவ்விரண்டிற்கும் இடையிலான வேறுபாடு உணரப்படவில்லை. அது மட்டுமல்லாமல், அதற்கு மேலும் ஒருபடி சென்று. ஆகம நெறிகள், முடிந்த முடிபாக, வேத நெறிகளிலிருந்தே உருப்பெற்றன; வேத உண்மைகளின் விரிவுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன; அல்லது இன்றைய கால நிலைக்கும் ஏற்கும் வகையில் அவ்வேத உண்மைகளைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளன என்ற

கொள்கையும் பரவலாக வழங்கலாயிற்று. மந்திரங்கள் இயற்றப்பட்ட காலகட்ட முடிவிற்கும், பின்னர், வேதங்கள், ‘’அபெளருஷெயம்‘’, அதாவது, காலவெளி எல்லைகளைக் கடந்த புருஷனாகிய ஈஸ்வரனாலும் இயற்றப்படாதன. எனக் கருதப்பட்டன. ஆனால், ஆகமங்கள் (சைவ, சாக்த, வைஷ்ணவ) மட்டும், சிவன் அல்லது விஷ்ணுவின் வாயிலிருந்து வெளிப்பட்டனவாக உரிமை கோரப்பட்டு அதனால், அவை, முறைப்படி ‘’பெளருஷெயம்‘’ என அழைக்கப்படலாயின, ‘'வேத சம்ஹிதாக்களில் கூறப்பட்டிருப்பன எல்லாம், வைதீக சடங்குகளின்போது, ஒதுவதற்கான மந்திரங்களாம். ஆனால், ஆகமங்கள், சிவ அல்லது விஷ்ணு வழிபாட்டு நெறிகளின் விளக்கங்களையும், யோகப் பயிற்சி முறைகளையும், தத்துவ ஞான ஆராய்ச்சிகளையும் நம்மகத்தே கொண்ட பாடநூல்களாம். மந்திரப் பகுதி, பிராமணப்பகுதி ஆகிய இரண்டையும் கொண்ட, அல்லது கர்மகாண்டம், ஞானகாண்டம் ஆகிய இரண்டையும், அல்லது, வேத வேதஸிரஸ் ஆகிய இரண்டையும், குறிக்க, வேதங்கள். ஒரு மீமாம்ஸத்தின் துணையை நாடுகின்றன. ஆனால் ஆகமங்கள், முறையான பாட நூல்களாதலின் ஒரோவழி, தேவைப்படினும், உரைவிளக்கம் ஒன்றை மட்டுமே எதிர் நோக்கும். ஆகமங்கள், கி. பி; 1000க்குப் பிற்பட்ட காலத்தே வழக்காற்றிற்கு வந்த "பாஷை‘’ என்ற மொழிவடிவில் இருக்க, வேதங்கள்,

த.வ-12