பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக்காண்டம், சேரன் செங்குட்டுவன் என்ற அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவன் பெருமை, அவன் வடநாட்டுப் படையெடுப்பு ஆகியன பற்றிக் கூறுகிறது.

“The third canto has a Sera king, Senguttuvan as its hero and it deals with the greatness of this monarch and victorious expedition to Northern India” page : 598

முதல் இரு காண்டங்களாம் ஒரு முழு நூலை இயற்றிய ஆசிரியர், காற்சிலம்பைத் தம் கருத்துக்கு அப்பாலும் துரத்திவிட்ட பின்னர், தம்முடைய பாட்டுடைத் தலைவன் தலைவியரை வானுலகிற்கு வழி அனுப்பி வைத்துவிட்ட பின்னர், செங்குட்டுவன் புகழ் பாடுவதே தம் தலையாய குறிக்கோளாகக் கொண்ட மூன்றாம் காண்டத்தை இணைப்பதன் மூலம், தம் காவியக் கட்டுக்கோப்பினை, வேண்டுமென்றே சிதைத்து விடுவாரா என்ற கேள்வி ஆய்வுக்கு உரியதாகும். அத்துணைப் பெரும்புலவர், தம்முடைய நூலினை அவ்வாறு கெடுத்துவிடுவார் என நான் எண்ணவில்லை.

“whether the author of the complete poem i.e., the first, and second canto's, after dismissing the anklet from his purview and despatching his hero and heroine to heaven, deliberately twined the unity of his Epic, by adding a third canto, whose chief object was to glorify a Senguttuvan, I de not think such a great artist would have thus spoilt his oWn. poem. page : 598, 599

இவை போலும் தமிழ், தமிழர்களின் பழம்பெருமைகளைச் சீர்குலைக்கும் கருத்துக்களும், சங்க இலக்கியங்களின் சிறப்பினைச் சீர்குலைக்கும் கருத்துக்களும், மூவேந்தர் ஆட்சிக்காலத்து முதுமையைச் சீர்குலைக்கும் கருத்துக்களும் இலைமறைகாயாக, ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

பல்கலைக்கழக நிலையில், தமிழ்த் துறையில் எம். ஏ பட்டப்படிப்பிற்குப் பயிலும் மாணவர்கள், தென்னிந்திய