பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தமிழர் வரலாறு

கி. மு. ஏழாம் நூற்றாண்டுதான் என்பதை வலுவாக உறுதி செய்யும் எண்ணற்ற சான்றுகளைக் கொடுத்துள்ளனராகவும், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலோர், பாணினி கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற தவறான முடிவிலிருந்து, தங்களை, இன்னமும் விடுவித்துக் கொண்டாரல்லர். ஆபஸ் தம்பர், பாணினிக்கு முற்பட்ட வராயின், அவருடைய காலம், நான் மேலே கருத்துத் தெரிவித்த காலத்திலும் முற்பட்ட காலமாதல் வேண்டும்: ஆபஸ்தம்பரைப் போவவே, "சாகா" என்ற வேதக் கொள்கையின் விளக்கவுரைகாரராகிய பெளதாயனர், அவரைவிட இருநூறாண்டு மூத்தவராவர். இவ்விரு சூத்ரகாரர்களும் (Soothrakaaras) கிருஷ்ணயஜுர் வேதத்தின் "தைத்திரிய" பிரிவைச் சேர்ந்தவராவர்.

இக்கொள்கை, விந்தியத்திற்குத் தெற்கிலேயே சிறப்பாகப் பரவியிருந்தது. வடஇந்தியாவில், இந்நெறியைப் பின் பற்றுபவர், கடந்த ஆயிரம் ஆண்டுகால எல்லைக்குள் வட நாட்டிற்குக் குடிபெயர்ந்த தென் இந்தியப் பிராமணர்களின் வழிவந்தவராவர். ஒரு பிரிவு "சாகா" வைப் (வேதக் கொள்கை ஒன்றை, பின்பற்றுவோர் அனைவரும், தாங்கள் வாழ்ந்திருந்த இடத்தில் வாழ்ந்திருந்தமைக்கான சிறு அடையாளந்தன்னையும் விட்டுவைக்காமல், வடக்கிலிருந்து தெற்கே குடிபெயர்ந்துவிட்டனர் என்பதைக், கற்பனை, செய்து பார்க்கவும் நம்மால் இயலாது ஆதலின், "தைத்திரிய" சாகா, தனி சாகாவாகப் பிரிந்து வழங்கிய காலந்தொட்டு. அதாவது வைசம்பாயனரின் மாணவராகிய வியாசர் காலந்தொட்டு, அதாவது பாரதப் பெரும்போர் காலந்தொட்டு, அத்"தைத்திரீய" சாகா, தென்னிந்திய சாகாவாக ஆகியிருத்தல் வேண்டும் (பாண்டவர் பக்கம் இருந்து போரிட்ட தென்னாட்டவருள் "தித்திரி"என்பார்களும் இருந்தனர். அவர்களின் சாகா, "தைத்ரேயம்" என அழைக்கப்பட்டது என்றும், வைசம்பாயனர், யாக்ஞவல்கியரின் எச்சிலை விழுங்கியது குறித்த கட்டுக்கதை, ஒரு. பறவையின் பெயர், சாகா என வழங்கப்படுவதற்கான,