பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

தமிழர் வரலாறு

பெரும் அளவில் புதியன புகுத்தலுக்கும் திருத்தங்களுக்கும் ஆளாகிவிட்டதாகத் தெரிகிறது. காரணம் : அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சில வழிபாட்டு நெறிகள், அவை மிக மிகப் பிற்பட்டன. ஆதல் கூடுமோ என்ற ஐயுணர்வை எழுப்புமளவு அத்துணை விரிவாக உள்ளன. வான்கோள்களை, அவை ஆட்சிபுரியும் வார நாட்களின் வரிசையில் குறிப்பிட்டிருப்பது, அச்சூத்திரங்கள், பி. ற் கா ல த் தி ல் , வரன்முறையின்றித் திருத்தப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது:

வட ஆரியப்பழக்க வழங்கங்களுக்கு எதிரான தென்னாட்டவர் பழக்க வழங்கங்கள் :

தென்னாட்டுப் பிராமணர்களின் வாழ்க்கைமுறை களுக்கான விதிகளை வகுக்கும்போது, பெளதாயனர், ஆரிய வர்த்தத்து ஆரியர்களுக்கு, ஒருவகையில் வெறுப்பூட்டு வனவும், தென்னாட்டவர்களுக்கே உரியனவுமாய வழக்கங்களை இயல்பாகவே விவாதிக்கிறார். தென்னிந்தியர்கள், ! ஆரிய வழிபாட்டு நெறியை ஏற்றுக்கொண்டு, ஆரிய வாழ்க்கை முறைகளுக்குக் கட்டுப்பட்டுவிட்ட பின்னரும், கைவிட்டு விடாது, மேற்கொண்டிருந்த பழைய தஸ்யூவழக்கங்கள் ஐந்து, பெளதாயனரால் குறிப்பிடப்பட்டுள்ளன. "அவை யாவன : சமயதிக்கை பெறாதவரோடு உடன் இருந்து உண்ணல் ; மகளிரோடு இருந்து உண்ணல், பழைய உணவை உண்ணல் : ஒருவன், தன் தாய்வழி அம்மான் மகளோடும், தந்தையோடு உடன் பிறந்தாள் மகளோடும், காதல் உறவு கொள்ளுதல், ...... கூறிய இவ்வழக்கங்கள்.ஒவ்வொன்றிற்கும், அந்நாட்டு நடைமுறை விதியே, அதிகார உரிமையுடைய தாகக் கருதப்பட வேண்டும். (யததத் அனுபதென ஸஹ போஜனம் : ஸ்திரியா ஸஹபோஜனம் பர் யுவித போஜனம் மாதுல பித்ருஸ்வஸ்ற்துஹறிதிர் கம நம் : இதி......தத்ர தேசப் ராமாண்யம் எவஸ்யாத்" Baudhayana Dharma Sutras: 1 :1, 2, 3, 6) வடநாட்டு, வாழ்க்கைச்சட்ட வல்லுநராகிய கெளதமர், உள்நாட்டு வழக்கங்களை, அடிப்படை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைப் பெளதாயனர்