பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

தமிழர் வரலாறு

அமையும். அவ்வகையில், மாட்டிறைச்சி, அவர்களை ஓராண்டு காலத்திற்கு மன நிறைவு கொள்ளச் செய்யும் ; எருமை இறைச்சி, மேலும் நீண்ட காலத்திற்கும், காண்டா மிருகத்தின் இறைச்சி, அவற்றினும் நீண்ட காலத்திற்கும் மன நிறைவினைத் தரும். "சதபலி" என்ற மீன் வகையும், "வார்த்ரானஸ்"எனப்படும் நாரை இனமும் நீண்ட காலத்திற்கு மன நிறைவைத் தரும். [Yajanavalkia's Sat. Brah 2:7, 1 6: 4, 7 26-28, 17: 1-3) தென்இந்திய பிராமணர்கள்,எப்போது, ஏன், இறைச்சி உண்ணலைக் கைவிட்டனர் என்பது ஒரு சுவையூட்டும் நிகழ்ச்சியாம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக நான் கருதும் தமிழ்ப்புலவர் கபிலர், "புலால் நாறும் கொழுத்த கறி இறைச்சித் துண்டங்களை, பூமணம் நாறும் புகை எழத் தீ கொளுத்திச் சமைத்த, ஊனையும், துவையலையும், கறியையும், சோற்றையும் உண்டு. வருந்தும் செயல் அல்லது, வேறு செயல் அறியாவாகலின், பாடுவார் கைகள் மென்மையுடையவாயின" எனக்கூறி யுள்ளார். பிறிதோரிடத்தில், தம்பாடற்காம் பரிசிற். பொருளாக, "மது இருந்த சாடி வாய் திறப்பவும், ஆட்டுக் கிடாய் வீழ்ப்பவும், சமைக்கப்பட்டுக் குவிந்து கிடக்கும்". கொழுவிய துவையலையும் , ஊனையும் உடைய சோற்றையுமே விரும்பியுள்ளார்.

"புலவு நாற்றத்த பைந்தடி பூ நாற்றத்த புகைகொளீஇ, ஊன்துவை

கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது 

பிறிது தொழில் அறியா வாகலின், நன்றும் மெல்லியபெரும!.........................பாடுநர் கையே,".


"மட்டுவாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும். அட்டு ஆன்று ஆனாக்கொழுந்துவை ஊன் சோறும் - . . . . . பெட்டாங்கு' -(புறம்: 14:12-19; 13-1-9)

கி. பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில், விஷ்ணு, சிவன் மீதான பக்திப் பெருவெள்ளம். தமிழ்நாட்டில் பெருக்