பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடஇந்தியாவும் ... கி. மு. 1000 ... 500 வரை தமிழரசர் பங்கு சிறிதே அல்லது அறவே இல்லை எனலாம்: ஆகவே, பாணினி போலும், முதலாம் ஆயிரத்தாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வடஇந்திய சமஸ்கிருத நூலாசிரியர்கள், தென்னாட்டவரை, அறவே குறிப்பிடவில்லை. நான் எண்ணுவதுபோல், கி. மு. ஏழாம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கிய பாணினி, "அஷ்மகம்" ஒன்று தவிர்த்து, நர்மதை ஆற்றுக்குத் தெற்கில் இருந்த எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டாரல்லர். இதிலிருந்து, திருவாளர் டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள்: தென்னிந்திய நாடுகளின் பெயர்களே பாணினிக்குத் தெரியாது என உய்த்துணர்கிறார். "அஷ்டாத்தியாயி"யைக் கற்ற, அறிவார்ந்த ஆசிரியன் எவனும், பாணினி, ஒரு பொறுப்பற்ற, அல்லது ஏதும் அறியாத இலக்கண் ஆசிரியன் ஆவன் எனக் கூறுமளவு துணிவு பெற்றவனாக மாட்டான். ஆனால் நாம் பெற்றிருப்பது ஒரு சொல்அன்று. பாண்டியர், சோழர், கேரளா என்ற மூன்று சொற்கள். ஆழமாகவும், முழுமையாகவும் ஆய்ந்து காணும் இலக்கண ஆசிரியன் எவனும், அச் சொற்களை அவன் அறிந்திருந்தால், தவறாமல் செய்திருக்க வேண்டிய, அச் சொற்களின் அமைப்பு பற்றிய விளக்கம் பாணினியால் அளிக்கப்படவில்லை. ஆகவே, தென்னிந்திய நாடுகளின் பெயர்கள் பாணினிக்குத் தெரிந் திருக்கவில்லை. அல்லது, வேறு வகையில் கூறுவதாயின், கி. மு. ஏழாம் நூற்றாண்டில் ஆரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒன்றே முறையான முடிவு ஆகும்"எனக் கூறுகிறார் பந்தர்க்கார், [Carmichael Léctures , 1918. Page: 4-7) . இக்காரணகாரியங்களின் பொருத்தத்தை என்னால் ஏற்றுப் பாராட்ட இயலாமைக்கு வருந்துகின்றேன். பாணினி, அச் சொற்களை அறிந்திருக்க முடியும் ; ஆனால். அவற்றைச் சமஸ்கிருதச் சொற்களாக மதித்திருக்க முடியாது. (உண்மையில் அவை தமிழ்ச் சொற்கள்). நாம், இப்போது பஞ்சாப் என்றும், ஆப்கானிஸ்தான் என்றும் பெயரிட்டு அழைப்பனவும், அவற்றிற்குத் தெற்கில் உள்ள மேலும் சிலவுமான, அவர் நேரிடையாகத் தெரிந்திருந்த அண்டை