பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடக்கும் தெற்கும் கி. மு. 500 ... 1 வரை

219

பெரிய கோட்பாட்டினைக் காட்டிவிட்டார் திருவாளர் 14. டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள்.[Carmichal Lectures ; 1918, Page : 9-13)]


காத்யாயனரோ, பதஞ்சலியோ, பாண்டு என்ற சொல், ஒரு வட நாட்டு அரச இனத்தின் பெயர் என்று கூறவில்லை. அவர்களுடைய தேவைக்குப், பாண்டு என்ற அச்சொல். ஆளும் ஒர் அரச இனம், ஒரு நாடு இவற்றைக் குறிப்பதாதலே. போதும். ஆளும் அரசர்கள் அனைவருமே சத்திரியர்களாகக் கருதப்பட்டனர் ஆதலின், பாலி மொழியில் “பண்டு” என வரும் “பாண்டு” என்ற சொல்லை, ஒரு சத்திரிய இனத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டதில் பதஞ்சலி பெரியதொரு, பிழையினைச் செய்துவிடவில்லை. ஆனால், அதையே: அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இனம் அல்லாத ஒரு வெளிநாட்டு இனத்தவர் படையெடுப்பினைக் கட்டிவிடுவது, முற்றிலும் தவறானதாகும். திருவாளர். டி.ஆர். பந்தர்க்கார் அவர்கள், தம்முடைய கூற்றினை வலுப்படுத்துவதற்காக, மெகஸ்தனிஸ் அவர்களின் எழுத்திலிருந்து எடுத்துக்காட்டப் பட்டதாகக் கூறப்படும், பொருளற்ற, பொருத்தம் அற்ற. ஒரு கட்டுக் கதையினை வலிந்து புகுத்தியுள்ளார். “எராக்லெஸ், இந்தியாவில் ஒரு மகளை ஈன்றெடுத்தார். அம்மகளை அவர், பண்டைய எனப்பெயரிட்டு அழைத்தார். அவளுக்குத் , தெற்கு நோக்கி நீண்டு, கடல் வரையும் பரவியிருந்த நாட்டை. அளித்தார். அங்கு, கப்பம் கட்டுவதில் தவறியவர்களை வற்புறுத்தித் திறை செலுத்தும் முறைமைப்பாடு உடைய' வரின் துணை அரசியார்க்கு எப்போதும் கிடைப்பதற்காக, ஒரு நாளைக்கு ஒரு சிற்றுார், அரண்மனைக் கருவூலத்திற்கான கப்பத்தைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்ற. ஆணையிட்டு, ஆங்கு, அவள் ஆட்சிக்குட்பட்ட மக்களை, 365 ஊர்களுக்குமாகப் பங்கிட்டு அளித்தான்' கூறுகிறது அக்கதை [Macrindle. Ancient India as described: by Megasthenes and Arrian. : P ge: 159.]