பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

தமிழர் வரலாறு

அறவுரைகளால் கிளர்ச்சி பெறச் செய்தனர். எப்பொழுது, ஓயாது இயங்கிக்கொண்டு இருக்கும் அலையலையான அகக் கிளர்ச்சிகள் அடங்கிப் போக, அவற்றின் இடத்தைத் தன்னை மட்டுமே உணரும் நிலைபேறுடைய மனவுணர்வுக் குவியல் வெற்றி கொண்டுவிட்டதோ, எப்பொழுது, கடுமையான புலனடக்க நெறி மேற்கொண்டு, தன் உயிரின் வீடுபெற்றிற்காம் விருப்பம், உலகத்தவர்க்குச் சமயக் கொள்கைகளை அவர் உள்ளம் ஈர்க்கும் சொற்களால் விளக்கி, அவ்வுலகத்து உயிர் அனைத்தையும் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் குப்புறத் தள்ளப்பட்டதோ, எப்பொழுது, உணர்ச்சிக்கு, உள்ளாகி, ஒயாது துடித்துக்கொண்டிருக்கும் உயிர், மாறா நியதிகளாம், வலிய இரும்புச் சங்கிலிகொண்டு சிறைசெய்யப். பட்டுவிட்டதோ, எப்பொழுது, புத்தர் கூறுவதுபோல, மனத்தொடுபடும் கோட்பாடு, கண்ணொடுபடும் கோட்பாட்டால் கெட்டு மங்கிப்போய்விட்டதோ, எப்பொழுது, சாங்கியர் கூறுவதுபோல், புத்தியின் "அத்யவசாயம்" மனத்தின் "சங்கல்பவிகல்ப"ங்களால், ஒளி கெட்டு மங்கிப் போய்விட்டதோ, அப் பொழுதே, ஜீனர், புத்தர்களின் போதனைகள் சமணமாகவும், பெளத்தமாகவும் தாழ்நிலை உற்றுவிட்டன : உற்றன ; இந்திய மக்களுக்குப், பெருங் கேடாக, மனிதனின், தன்னை மட்டுமே மதிக்கும் அகவுணர்வு, மேலும், இரு சமயப் பிரிவுகளை உருவாக்கி விட்டது. அந்நிலையே பெளத்தர்களின் பேரவைகள் கூடலாயின ஏனைய மக்களின் உயிர்களைக் காக்கும், சமயத்தின் பெயரால், வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வேட்கையால் உந்தப்பட்ட, புத்தத்துறவிகள், நாட்டை அலைக்கழிக்கத் தொடங்கிவிட்டனர். முந்திய தலைமுறைகளைச் சேர்ந்த புத்த பிக்குகள் போல் அல்லாமல், போர்க்குணம் வாய்ந்த