பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

தமிழர் வரலாறு

மீட்பதற்குப் போர் நிகழ்வதும் மட்டுமே வேள்விக்கு முன்பாக நிகழும். ஆனால், பேரரசு ஆட்சி என்பது தனி அரசன் ஒருவனின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்ததே அல்லது, ஒர் அரச இனத்தின் செயலே அன்று ஆகவே, இந்தியப் பேரரசுகள் குறித்துக் கூறப்படும் பொதுவான கருத்துக்கள் எல்லாம், குறுகிய காலகட்டத்தில் நிற்பன; பொருள் அற்றன.

அசோகனுக்குப் பின்னர் அரியணை ஏறியவரெல்லாம், அரசியல் நெறியாலும், ஒழுக்க நெறியாலும் வலுவிழந்தவர்கள் ! ஆகவே அவன் மறைவினை, மகதம் போன்ற பிற நாட்டு மன்னர்களின் புகழேற்றம் இடங்கொண்டுவிட்டது. அத்தகைய அரசர்களுள் ஒருவன், கலிங்க நாட்டுக் காரவேலன். அவனுடைய கல்வெட்டுக்கள், அவன் நாட்டிற்கும் மதுரைக்கும் இடையில் நடைபெற்ற வாணிகத்திற்குச் சான்று பகர்கின்றன.

கலிங்கமும் தென் இந்தியாவும்:

விதி, எப்போதும்போல விளையாடிவிடவே, அசோகன் கடைப்பிடித்த தர்மம், அவன் இறப்பிற்குப் பின்னர், அவன் பேரரசைச் சிதறுறச் செய்துவிட்டது. அவ்வகையில் தன்னாட்சி பெற்ற நாடுகளில் கலிங்கமும் ஒன்று. அதன் அரசன் காரவேலன் (கி.மு. 200), பாண்டி நாடுவரையும் சென்று பரவிய பெரும் புகழ்ச்சிக்கு உரியனாகிவிட்டான். அங்கிருந்து குதிரைகள், இரத்தினங்கள், முத்துக்கள், நீலக்கல் பட்டுமல்லாமல், அவற்றைச் சுமந்துவந்த யானைகளும் கப்பல்களும் அவனுக்குப் பரிசுப் பொருட்களாகக் கிடைத்தன. குதிரைகளையும், யானைகளையும். மாணிக்கங்களையும் ஏற்றிக் கொண்டு, வியத்தகு யானைக்கப்பல்களும் கொண்டுவரப் ப்ட்டன. முத்துக்கள், நீலமணிகளோடு இவற்றையும். பாண்டிய அரசன் அனுப்பிவைத்தான். [அப்ஹுத அசரியம் அத்தினாவன் பாரிபுரம் யு(ப) தென்ஹ ஹய ஹதி ரத்ன (மா) நிகம் பண்டராஜா எதானி அனெகானி முதமணிரத்னாளி ஹராபயதி இத்ஹ சத ச) (ஹதிகும்பா கல்வெட்டுக்கள்; J. B. O. R. S. iv. 401)]