பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்

237

வாராய்ச்சிகளால் தெரியவருவதுபோல், இந்தியர்களுக்குக், கி. மு. 3,000 அல்லது 4,000 போலும் மிகப் பழைய காலத்திலேயே எழுதத் தெரிந்திருந்தது என்றாலும், நிலப்படைத் துணைத் தலைவர், திரு. வாடல் ஷோ (Lient col. Waddel show) அவர்களால் பொருளாயப்பட்ட, சிந்து வெளிப்பழைய கல்வெட்டுக்களின்படி, எழுத்துக்கலை, நீண்ட காலம்வரை, அரச வீரர்களின் வெற்றிச் செயல்களை வரிசைப்படுத்தி: எண்ணப் பயன்பட்டதேயல்லாமல், இலக்கியப் பணிக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளல். வேண்டும். வேத மந்திரங்களின் தெய்வீகத் தன்மையும், ஆரியவர்த்த ஆரியர்களை, நினைவுப்பாறைமீது பொறிக்க. அல்லது செய்யுள் வடிவில் தரத் தூண்டவில்லை. சமயச் சார்பற்ற இலக்கியங்கள், இலக்கியத் திறனாய்வாளர்கள், அவற்றின் சிறப்புகளைச் சுட்டிக்காட்டி, மனித நினைவாற்றல் குறைவால் மறைந்துபோவதிலிருந்து, அவற்றைக் காக்க, வேண்டிய விருப்பத்தைத் தெரிவித்த நிலையில்தான், ஒலை. அல்லது காட்டுமரப்பட்டைகள் மீது எழுதப்பட்டன. இவ்வகையில், மிகவும் பழிக்கப்படு திறனாய்வாளர்களும், நாகரீக வளர்ச்சியில், பயனுள்ள ஒரு செயலைச் செய்தவர்களாயினர். சிறந்த திறனாய்வாளராம் தொல்காப்பியர் துணை இல்லாமல், பழந்தமிழர் வாழ்க்கை ஒவியத்தை மறுவலும் வரைந்திருக்க நம்மால் இயன்றிராது. ஆகவே இலக்கியத்திறனாய்வாளர்கள், குறிப்பாக இந்தியாவில், நாகரீக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பணிபுரிந்துள்ளனர். பிற நாடுகளைப் போலவே, தமிழ்நாட்டிலும், பண்டைத் தமிழ்ப் புலவர்கள், பறவைகளைப் போலத் தங்களை அறவே மறந்து பாடினார்கள். ஆரியர்கள், தென்னிந்தியாவில் வந்து வாழத் தொடங்கியது: மட்டுமல்லாமல், தமிழ்மொழி, தமிழிலக்கியங்களைக் கற்று. அம்மொழி இலக்கணங்களையும், அம்மொழியில் யாக்கப்பட்ட பாக்களையும் ஆராயத் தொடங்கிய பின்னரே இலக்கியத்தின் மீது எழுத்துக்கலை பொறிப்பதான தமிழ் இலக்கியம் எழுத்து வடிவம் பெறத் தொடங்கி, ஒரு சில காலம் வரையாவது அழியாதிருக்கும் நிலையைப் பெற்றது.