பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தமிழர் வரலாறு

ஆற்றும் வழிபாடு, ஆகிய இவைகளில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்களின் விரிவான விளக்கம், அம்மக்களின் உள்நாட்டு வாணிகம், சேய்மை அண்மைக்கண் உளவான நாடுகளோடு கொண்டிருந்த பண்டமாற்று வாணிகங்களின் வளர்ச்சி குறித்த உறவுநிலை, குறியீட்டு நிலையாம் எளிய தொடக்க நிலையிலிருந்து, அரிதின் முயன்று பயின்றாலல்லது, எளிதில் விளக்கம் பெறமாட்டா இலக்கிய, இலக்கண மரபுகள், முடிந்த முடிபாக முழுமையாக்கப்படும் வரையான, அவர்தம் இலக்கிய வளர்ச்சியின் விரிவுரை விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்பதின் பொருள் என்றால், தொல்லூழிக்காலத்திலிருந்து, கி. பி. 600 வரையான காலத்திற்கான தமிழர்களின் வரலாற்றினைத் திரும்ப வரைதற்குத் தேவைப்படும் வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் உள்ளன. அவ்வரலாற்றுக்கதை, மறுபடியும், வரையப்படுவது முயலப்பட்டுளது இந்நூலில்.

மக்கள் நாகரீகத்தின் பழங்கற் காலம், புதுக் கற்காலம் என்ற வேறுபட்ட காலகட்டங்களைச் சேர்ந்தனவாகிய கற்களால் ஆன படைக்கலங்களும், தொழிற்கருவிகளும், முறையாகத் திரட்டப்படவில்லை என்றாலும், பல்வேறு மக்களால் கண்டெடுக்கப்பட்டு, இந்தியநாட்டு அரும்பொருட்காட்சியகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அக்கருவிகள் கூறாமல் கூறும் சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு, அப் பழம்பெரும் நாட்களில், தமிழர்கள் நடாத்திய வாழ்க்கை நிலை பற்றிய ஒரு மதிப்பீடு சென்னைப்பல்கலைக்கழகம், 1926ல் வெளியிட்ட “இந்தியாவில் கற்காலம்” என்ற என் நூலில் என்னால் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய இரும்புக் காலத்தைச் சேர்ந்தனவாய படைக்கலங்களாலும், தொழிற் கருவிகளாலும் சிறிய அளவிலும், வடநாட்டு ஆரிய நாகரீகத்தோடு தொடர்புகொள்வதற்கு முன்னர், அவர்கள் வழங்கிய சொற்கள் பற்றிய ஆராய்ச்சி முடிவால் மிகப் பெரிய அளவிலும் தெரியவரும், அவர்களின் சமூக, சமய, அரசியல் தொழிலியல் வாழ்வு நிலைகள், சென்னைப்பல்கலைக்கழகம் 1929 ல் வெளியிட்ட “ஆரியத்திற்கு முந்திய தமிழர் நாகரீகம்” என்ற