பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கில் உள்ள பழந்தமிழர் பாக்கள்

245

கொடைவளம் ஆகியவற்றைக் கூறுகின்றன. இரண்டாவதாகப், போர்கள் குறித்துக் கூறுவதோடு, போரில் உயிர் நீத்த அரசர்கள் கொடைவள்ளல்கள் மீதான கையறுநிலைப் பாடல்களையும் கொண்டுளது. முதல் பாதிப்பாக்கள். போர்கள் குறித்தும் அடுத்துள்ள பாதியில் பாதிப்பாக்கள், கையறு நிலை குறித்தும், கடைசிக் காற்பகுதி, மேற்கூறிய இரு பொருள்கள் மீதுமான, பிற்காலத்தே கண்டுபிடிக்கப் பட்ட, கலப்படப் பாடல்களின் பின் இணைப்பாம். மூன்றாவதாக, பெரும்பாலான பாக்களின் கீழ், அப்பாக்கள் பாடப் பட்ட சூழ்நிலையை விளக்கும், கொளு எ ன ப் ப டு ம் பின்னுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இக்கொளுக்கள், அவை கூறும் கருத்தின் ஒரு பகுதியை அப்பாக்களைப் படித்து அறிந்துகொண்டதன் மூலமும், ஒரு பகுதியை, வழிவழியாக வந்த காதுவழிச்செய்திகள் மூலமும் அறிந்துகொண்ட, அத்தொகை நூலைத் தொகுத்தவரின் பிற்காலத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டனவாகத் தெரிகிறது. இத்தொகை நூலுக்குத், தெள்ளாறு எறிந்த நந்திவர்ம பல்லவன் (கி. பி. 830-854) காலத்தில் வாழ்ந்திருந்த, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர், பாரதம் பாடிய பெருந்தேவனார். பாடிய, கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும், முன்னுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுளது. இக்கடவுள் வாழ்த்துப் பாடல் ஆகம சம்யக்கொள்கைகள், கி. பி. 6 முதல் 9 வரையான நூற்றாண்டுகளில், மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்ட பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவனாகக்கொண்டு சிவன் புகழ் பாடுகிறது. இப்பெருந் தேவனார், சிவன் புகழ்பாடும் கடவுள்வாழ்த்து முன்னுரைப் பாடல்களை அகநானூறுக்கும், ஐங்குறுநூறுக்கும், முருகன் புகழ்பாடும் கடவுள் வாழ்த்துப் பாடலைக் குறுந்தொகைக்கும், விஷ்ணு சகஸ்ராாம ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பாக விளங்கும் திருமால் வாழ்த்துப் பாடலை நற்றிணைக்கும் கொடுத்திருப்பதால், இப்பெருந்தேவனார், பழங்காலப் பாடல்களைத் தொகுப்பதில் பெரு முயற்சி மேற்கொண்டார் எனத் தெரிகிறது.