பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தமிழர் வரலாறு

அல்லர், அந்தந்த நூற்றாண்டுகளில் ஒவ்வொரு பெயர் கொண்டு வாழ்ந்த பலராவர். அப்பெயர்கள் தனித்தனி மனிதர்களைக் குறிப்பன அல்ல. அவை, ஒவ்வொன்றும், ஒவ்வொரு குடிப்பெயரைக் குறிப்பனவாம் என்பது, திருவாளர் பர்கிதர் அவர்களின் பல்வேறு கருத்துக்களில் நனிமிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இம்முடிவு, குழப்ப நிலையைக் குறைத்துத் தெளிவு நிலையிைனத் தோற்றுவித்ததோடு, வடஇந்திய நாடுகளில் பழங்காலத்தே அடுத்தடுத்து அரசு கட்டில் ஏறிய அரசர்கள் பற்றிப் பெரும்பாலும் சரியானதொரு பட்டியலை, பொதுவாகப் பின்பற்றும் இப்பட்டியலைத் திருவாளர் பர்கிதர் அவர்கள் தயாரிக்கத் துணையும் புரிந்தது. (இப்பட்டியல்) வேதகாலத்தில் தென்னாட்டில் ஆரிய நாகரீகம் மெல்ல மெல்லப் பரலிய நிலையினைக் கண்டுகொள்ள எனக்கும் துணைநின்றது.

மெஸபடோமிய, எகிப்தியக் கல்வெட்டுக்கள், கிரேக்க, இலத்தீன் மொழி இலக்கியங்கள்போலும் இந்திய நாட்டைச் சேராதனவாகிய வரலாற்றுச்சான்றுகள், தனக்கு மேற்கே உள்ள நாடுகளோடு இந்தியா கொண்டிருந்த வாணிபத் தொடர்பினை மட்டுமே குறிப்பிடுகின்றன. செங்கடற்செலவு என்ற பெரிபுலுஸ் நூலின் தம்முடைய பதிப்பில், திருவாளர் ஸ்காப் அவர்களாலும், “உரோமப்பேரரசுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாணிகம்” என்ற தம்நூலில், திருவாளர் வார்மிங்டன் அவர்களாலும், இந்த வரலாற்றுச் சான்றுகள் முற்றவும் ஆராயப்பட்டு, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன. அந்நூல்களில் கூறப்பட்டிருக்கும் எழுத்து வடிவிலான நல்ல ஆவண அடிப்படையிலான செய்திகளை, இந்தியாவின் சார்பில் கிடைக்கக்கூடிய சிறுசெய்திகளோடும் ஒப்புக்காட்டி நூற்றாண்டு நூற்றாண்டு வாரியாக வரிசைப்படுத்தியுள்ளேன். .

ஆனால், இந்நூலுக்கு, உறுதிவாய்ந்த சான்றுக்களஞ்சியமாக நான் மேற்கொண்டது. கி. பி. 600க்கு முந்திய காலத்துத் தமிழ் இலக்கியமே ஆகும். பெரும்பாலான என் ஆராய்ச்சி