பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

267


களையும் உடைய ஆறலை கள்வர்கள், வழியில் பொருளோடு வரும் வழிப்போவாரை எதிர் நோக்கிக் காத்திருக்கும் அச்சம் தரும் வழி‘’.

‘’படுசுடர் அடைந்த பகுவாய் நெடுவரை
முரம்புசேர் சிறுகுடிப் பரந்த மாலைப்
புலம்புகூட் டுண்ணும் புல்லென் மன்றத்துக்
கல்லுடைப் பகுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறைக்கூன் நல்லில்
துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர்
அதர்பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி‘’

-நற்றிணை : 33 : 1-7

பாலை நிலத்தில் மிக எளிதில் கிடைக்கும் உணவு, விளாம் பழம், 'நிலம் பிளவு படுமாறு மண்ணுள் இறங்கிய வேரும், பெரிய கிளைகளும், உடும்புகள் அணைந்து கிடப்பதுபோலும் பொரிந்த செதில்களும் உடைய மிக உயர்ந்த விளாமரத்தின் கிளைகளிலிருந்து அறுபட்டுப், பச்சைக்கம்பலத்தை விரித்தாற். போலும் பசும்புல் விளைந்து கிடக்கும் நிலத்தின்மீது, இளம் சிறார்கள் ஆடி விடுத்த பந்து கிடப்பது போல் வீழ்ந்து பரந்து: கிடக்கும் விளாங்கனிகளாம் உணவு. பாலை நிலத்துமக்கள், விளாங்கனிகளைத் தங்களுடைய முக்கிய உணவாக மேற் கொள்வர்.

‘’பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்த நெடும்பொரி விளவின்
ஆட்டொழி பந்தின் கோட்டுமூக்கு இறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர் தாஅம்
வெள்ளில் வல்சி‘’.

-நற்றிணை : 24: 1