பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி. மு. 500 ... 1 வரை

269

இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.”
-குறுந்தொகை : 167


“தோழி : மதுவை நிரப்பிவைத்திருக்கும் நீலக்குப்பிகளைப் போன்ற குறுகிய வாயையுடைய சுனைகளில் வாழும் பிளந்த வாயையுடைய தேரைகள், கிளியோட்டும் கருவியாகிய, தட்டைப்பறை ஒலிபோல ஒயாது ஒலிக்கும், நாட்டுக்கு உரியவனாகிய நம் காதலன், களவுக்காலமாகிய பழைய திங்களில், முழுமதி நிலம் வாளியில் என் தோளை ஆரத் தழுவினான். அதனால் அவன் மேனியின் முல்லை மணம், என் தோள்களில் இன்றும் வீசா நிற்கும்.”

“மட்டம் பெய்த மணிக்கலத்து அன்ன இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையிற் கறங்கும் நாடன், தொல்லைத் திங்கள் நெடுவெண் நிலவின் மணந்தனன் மன்நெடுந் தோளே: இன்றும் முல்லை முகைநா றும்மே”. -குறுந்தொகை : 193

“பரல்கற்கள் மலிந்த பாலை நிலத்தில் வளர்ந்து ஓங்கி நிற்கும், மீன்குத்திப் பறவைபோலும் முளைகளையுடைய கள்ளிச்செடி மீது படர்ந்து தழைத்திருக்கும் முல்லையின் மணம் மிக்க மலர்களை, எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் தலையை உடையவாகிய ஆட்டுமந்தையை மேய்த்துவரும் வலிய கையையுடைய இடையன், இரவிலே கொய்து, பனம் குருத்தின் பிளவினால் தொடுத்த மாலையின் நறியமணம், மாலைப் போதில் தெருவெங்கும் கமழும் சிறிய குடிகளையுடைய பாக்கம்.”

“பரல்தலை போகிய சிரல்தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை