பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு ... கி.மு. 600 முதல் கி, பி. 14 வரை

295


உயிர் விலங்குகளின் ஏற்றுமதி:

பண்டைக்காலத்து இந்தியர்கள், உயிர் விலங்குகளைக் கடல் வழியாகப், பர்ஷிய வளைகுடாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும், சீனாவுக்கும் அனுப்பி வைத்தனர். இரண்டாம் தாலமியின் மயில்களையும், கிளிகளையும், அனுப்பி வைத்தமைக்கும் அவர்களே, பெரும்பாலும் பொறுப்பாவர்; ஏதன்ஸுக்குச் செல்யூகஸ் (Selewcus) நன்கொடையாக வழங்கிய புலி, சுல்லாவும் (Sulla) பாம்பெய் (Pampey) காட்சிப் பொருளாகக் காட்டிய சிங்கங்கள், பாம்பெய், காட்சிப் பொருளாகக் காட்டிய, ஒற்றைக் கொம்புக் காண்டா மிருகம், மெர்ஸ்லஸ் (Mercliws) நகரின் ஆடரங்கு அர்ப்பணிக்கப்பட்டபோது, கூண்டிலோ, குகையிலோ அடைத்துக் காட்டப்பட்ட புலி, ஆகிய விலங்குகள், சில வட இந்தியாவையும் சில தென்னிந்தியாவையும், சேர்ந்தவை, நிலவழியாக அனுப்பப்பட்டனவாம். ஆனால், கிரேக்க எழுத்தாளர்கள் பலரும், தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கும் குரங்குகள், கடல்வழியாகவே சென்றிருக்க வேண்டும். (Warnington 147, 148, 151) அலெக்ஸாண்டர் வெற்றிக்குப் பின்னர், சண்டைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட இந்திய யானை, பயரஸ் (Pyrrhus) என்பான், சில யானைகளைக் கி. மு. 28ல், ஐரோப்பாவிலிருந்து இத்தாலிக்கு, இடமாற்றி அனுப்பப் பட்டபோதே உரோமானியர்களுக்கு முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டது. கார்த்தகினியர்கள் (Carthagjniars) அவற்றை, ஆப்பிரிக்க யானைகளோடு பயன் கொண்டு, அவ்விரு இனங்களையும் பழக்க, இந்திய யானைப்பாகர்களை நியமித்தனரா என்பதை, என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால், கி.மு. 25ல் பனோர்மோஸ் (Panormos) எனும் இடத்தில் ஹாஸ்ட்ருபால் (Hasirubal) இந்தியர்களால் செலுத்தப்பட்ட யானைகளைப் பயன்படுத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது. உரோமப் பேரரசோடு நடத்திய இரண்டாம் புனிக் (Punic) போரில், ஹனிபால், ஹாஸ்ட்ருபால் (Hannibal, Hasdrubal) இருவரும் அதுவே செய்தனர். ரபியா (Rapia) எனும் இடத்தில் நடைபெற்ற போரில், தாலமியின்