பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

தமிழர் வரலாறு


"ஊதல் வேண்டுமால் சிறிதே, வேட்டொடு
வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்
நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே’’

--(அகம் : 318 : 13-15,

முந்தைய நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டுவிட்ட கிளிகள், மயில்களின் ஏற்றுமதி இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்தது ; அதில் ஐயமில்லை. கிரேக்கர்களால் அஸ்பிஸ்’ (Aspis) என அழைக்கப்படும் நாகப்பாம்புகள், மலைப் பாம்புகள், உள்ளிட்ட பாம்புகள், ஏற்றுமதி செய்யப்பட்ட பிற உயிரினங்களாம், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது அடி நீளம் பாம்பு ஒன்றை ஸ்ட்ராபோ எகிப்தில் பார்த்துள்ளார். (Warmington. Page : 157)

விலங்குதரு பொருள்கள் :

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிக மிக முக்கியமான பொருள்களுள் ஒன்று தந்தம். கிரேக்கர்கள், தங்கள் நாகரீகத்தின் முதிர்ந்த நிலையில், உருவச்சிலைகளில், ஆடையால் மறைக்கப்படாத புறத்தோற்றப் பகுதிகளுக்கு, அதைப் பயன்படுத்தினர். முத்துக்கள், முதன்முதலில், ஜுகுர்தைன் (Jugurthine) போரின்போது, உரோமுக்கு, அறிமுகம் செய்யப்பட்டு, பாம்பே (Pompey) என்பவரால், இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருங்குவியலால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளாக ஆக்கப்பட்டது. தாலமிகளின் கருவூலங்கள், அகஸ்டஸால், திரும்பக். கொண்டுவரப்பட்டபோது, அப்பேரரசின் வீழ்ச்சியில், அவை, எல்லோர்க்கும் கிடைக்கும் எளிய பொருளாயின. முத்துக்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட சிசிரோவின் (Cicero) காலத்தில், இன்றைய நாணயம் எட்டாயிரம் பவுன் மதிப்புள்ள ஒரு முத்து, 'ஹெளோப்னன் (Aesopws) மகனால், மெதெல்லா (Metella) காதிலிருந்து கழற்றப்பட்டு, வறட்சிக் காலத்தில் ஒரு பெரும்பணத்தொகையை விழுங்கினோம் என்ற மன நிறைவு கொள்வான் வேண்டி, வேண்டுமென்றே திட்ட மிட்டு